Home /News /sports /

Ind vs SA 5th T20I - தினேஷ் கார்த்திக்கைக் கண்டு அஞ்சும் தென் ஆப்பிரிக்கா- கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா?

Ind vs SA 5th T20I - தினேஷ் கார்த்திக்கைக் கண்டு அஞ்சும் தென் ஆப்பிரிக்கா- கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா?

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

பெங்களூருவில் மழை பெய்து நாசம் செய்யாதிருந்தால் இன்று இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் 2-2 என்ற சமநிலையுடன் கோப்பையை வெல்ல போராடும் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும், கடந்த 2 போட்டிகளில் விட்டேத்தியாக ஆடி கிட்டத்தட்ட விட்டுக்கொடுப்பது போல் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இன்று அனைத்து துறைகளிலும் சீறி எழும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
    பெங்களூருவில் மழை பெய்து நாசம் செய்யாதிருந்தால் இன்று இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் 2-2 என்ற சமநிலையுடன் கோப்பையை வெல்ல போராடும் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும், கடந்த 2 போட்டிகளில் விட்டேத்தியாக ஆடி கிட்டத்தட்ட விட்டுக்கொடுப்பது போல் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இன்று அனைத்து துறைகளிலும் சீறி எழும் என்று எதிர்பார்க்கலாம்.

    இந்தத் தொடரின் சூப்பர் ஸ்டார் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான், அன்று இவர் 360 டிகிரி வீரராக டிவில்லியர்ஸ் மினியேச்சர் என்பது போல் ஆடி தோற்றுக் கொண்டிருந்த இந்திய அணியை தன் அதிரடி ஹிட்டிங் மூலம் வெற்றிப்பாதைக்குத் திருப்பினார், உண்மையில் இவரைக் கண்டு தென் ஆப்பிரிக்கா நிச்சயம் அஞ்சவே செய்யும். ஏனெனில் மைதானத்தின் பீல்டர்களே இல்லாத பகுதிகளில் தினேஷ் கார்த்திக் தன் ஷாட்களை ஆடி அந்த அணியின் திட்டங்களை முடக்குகிறார்.

    தினேஷ் கார்த்திக்குடன் ஹர்திக் பாண்டியா,  இஷான் கிஷன் ஆட்டத்திலும் பெரிய முன்னேற்றம் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக் கிளாசன், வாண்டெர் டசன், டேவிட் மில்லர், ரபாடா, நார்ட்யே என்று சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர்.

    முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 ஆடிய அணியில் இருந்த வீரர்களில் தினேஷ் கார்த்திக் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளார். ராஜ்கோட்டில் 27 பந்துகளில் 55 ரன்களை விளாசி 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். 16 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் முதல் டி20 போட்டியில் ஆட்ட நாயகனான தினேஷ் கார்த்திக் பிறகு ராஜ்கோட்டிலும் ஆட்ட நாயகன் ஆனார்.

    வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானும் ராஜ்கோட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த போட்டியில் அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறார். முதல் மூன்று போட்டிகளிலும் விக்கெட் இன்றி இருந்த ஆவேஷ், அணி நிர்வாகம் காட்டிய நம்பிக்கையை நிரூபித்தார்.

    “இங்கே நடந்த நான்கு ஆட்டங்களில் ஆடும் பதினொன்றில் எந்த மாற்றமும் இல்லை. தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு நான் பெருமை சேர்க்க விரும்புகிறேன். அவர் அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறார், ஏனென்றால் நீங்கள் திடீரென ஒருவீரரை கைவிடவோ சேர்க்கவோ முடியாது.

    அவர் அனைத்து வீரர்களுக்கும் விளையாடுவதற்கு போதுமான வாய்ப்புகளை வழங்கியுள்ளார், எனவே உங்களை நிரூபிக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது,” என்று போட்டிக்கு பிந்தைய ஊடக உரையாடலில் ஆவேஷ் கான் கூறினார்.

    எனவே இன்று மழை குறுக்கிடாமல் இருந்தால் இரு அணிகளும் கோப்பையை வெல்ல போராடும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Dinesh Karthik, India vs South Africa

    அடுத்த செய்தி