தூங்காதே தம்பி தூங்காதே.. இடம் போய்விடும்: ரிஷப் பண்ட்டிற்கு முன்னாள் இந்திய வீரர் குட்டு
தூங்காதே தம்பி தூங்காதே.. இடம் போய்விடும்: ரிஷப் பண்ட்டிற்கு முன்னாள் இந்திய வீரர் குட்டு
ரிஷப் பண்ட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 போட்டியில் இன்று 4ம் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதுவரை 3 போட்டிகளில் ரிஷப் பண்ட் 40 ரன்களையே அடித்துள்ளார். இதனையடுத்து முன்னாள் இடது கை பவுலிங் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அணியில் நீடிக்க வேண்டுமெனில் மட்டை ஓயலாகாது என்று கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு குறிப்பாக வெய்ன் பார்னெல், வைன் பிரிட்டோரியஸ், ஸ்பின்ன்ர்கள் கூட ரிஷப் பண்ட்டிற்கு ஆட்டம் காட்டுகின்றனர். அடிக்கப்போய் இருமுறை டீப்பில் கேட்ச் ஆனார், ஒருமுறை பிரிடோரியஸ் ஸ்லோயர் பந்தில் வெளியேறினார்.
இந்நிலையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கூறும்போது, “அவர் தேங்கிப் போயுள்ளார், ரிஷப் பண்ட் ஆடியே ஆக வேண்டும். இப்போது கேப்டன்சியில் இருக்கிறாய் சரி, ஆனால் ஒரு கட்டத்தில் விளையாடும் 11 வீரர்களில் இடம் பிடிக்க ரிஷப் பண்ட் போராட வேண்டிய நிலை ஏற்படும்.
ஏற்கெனவே இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக் என்ற விக்கெட் கீப்பர்-பேட்டர்கள் அணியில் இருக்கின்றனர். சஞ்சு சாம்சன் காத்திருக்கிறார், கேஎல் ராகுலும் விக்கெட் கீப்பர்தான். ராகுல் பெஸ்ட் கிரிக்கெட்டர், ஆகவே நிறைய போட்டி இருக்கிறது. எனவே ரிஷப் பண்ட் மட்டை ஓய்வெடுக்கலாகாது.
குறிப்பாக டி20 ஆட்டம் அவரைப் போன்ற வீரர்களுக்கானது. ரிஷப் பண்ட் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நான் மறுக்கவில்லை. அவருக்கு 24 வயதுதான் ஆகிறது இன்னும் 10 ஆண்டுகள் அவர் ஆடினால் பெரிய வீரராக திகழ்வார். ஆனால் இன்று வரை அதற்கான சுவடு தெரியவில்லை.
ஆஃப் சைடில் பந்தை ஆடும்போது, அவர் தன் பவரை அதிகம் பயன்படுத்துகிறார். லெக் திசையில் ஆடும்போது அதே பவரை பயன்படுத்தும் போது பேலன்ஸ் இழந்து திண்டாடுகிறார். மிகவும் போட்டு சாத்த வேண்டும் என்று ஆடுகிறார் அதுவும் பந்தை தூக்கியே அடிக்கிறார். எனவே ஆஃப் சைடில் ஆடும்போது தரையோடும் லெக் திசையில் தூக்கி அடிக்கவும் அவர் மாற வேண்டும்.” என்கிறார் இர்பான் பதான்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.