Home /News /sports /

India vs SA 3rd test- டாஸ் வென்றார் விராட் கோலி, இந்தியா பேட்டிங்- சிராஜுக்குப் பதில் உமேஷ் யாதவ்

India vs SA 3rd test- டாஸ் வென்றார் விராட் கோலி, இந்தியா பேட்டிங்- சிராஜுக்குப் பதில் உமேஷ் யாதவ்

விராட் கோலி - எல்கர் 3வது டெஸ்ட் கேப்டவுன்

விராட் கோலி - எல்கர் 3வது டெஸ்ட் கேப்டவுன்

கேப்டவுன், 3வது டெஸ்ட் இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, ரிஷப் பண்ட், அஸ்வின், சர்துல் தாக்கூர், ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

    கேப்டவுன் டெஸ்ட்டில் விராட் கோலி தன்99வது டெஸ்ட்டுக்கு கேப்டனாகத் திரும்பியுள்ளார், வந்தவுடன் அவருக்கு நற்செய்தி டாஸில் வென்று முதலில் பேட் செய்யத் துணிந்துள்ளார். அணியில் சிராஜுக்குப் பதில் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளார் இது ஒன்றுதான் மாற்றம். விகாரி ட்ராப் செய்யப்பட்டு கோலி வந்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    பிட்ச் ரிப்போர்ட்: ஹஷீம் ஆம்லா தன் பிட்ச் ரிப்போர்ட்டில் பிட்சில் புற்கள் நிறைய காணப்படுவதாகத் தெரிவித்தார். இதனால் பந்துகளில் வேகம், பவுன்ஸ் இருக்கும். பிட்சில் கொஞ்சம் ஈரப்பதம் இருக்கிறது, ஒருமுனையில் பவுன்ஸ் இருக்கும் இன்னொரு முனையில் பந்துகள் இருபுறமும் ஸ்விங் ஆகும்.

    புல்தரை பிட்சில் பேட்டிங் எடுத்தது பற்றி விராட் கோலி கூறும்போது, “பிட்சில் புற்கள் உள்ளன. இது புரிகிறது, ஆனால் முதலில் பேட் செய்து கொஞ்சம் ஸ்கோரை வைத்துக் கொண்டால் நல்லது. அதன் பிறகு பவுலர்களின் திறமையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். அணியில் விகாரி இல்லை, அவருக்குப் பதிலாகத்தான் நான் வந்துள்ளேன். இஷாந்த்தா, உமேஷ் யாதவா என்பதில் கடினமான முடிவு எடுக்க வேண்டியிருந்தது, உமேஷ் யாதவ் பிரமாதமாக வீசி வருகிறார், எனவே அவரை சிராஜுக்குப் பதில் எடுத்துள்ளோம்.

    இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, ரிஷப் பண்ட், அஸ்வின், சர்துல் தாக்கூர், ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.

    தென் ஆப்பிரிக்கா அணி: டீன் எல்கர், மார்க்ரம், கீகன் பீட்டர்சன், வான் டெர் டியூசன், தெம்பா பவுமா, கைல் வெரைன், மார்கோ யான்சென், கேகிசோ ரபாடா, மகராஜ், டுவேன் ஆலிவர், லுங்கி இங்கிடி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli, India vs South Africa

    அடுத்த செய்தி