Home /News /sports /

தோனியின் அட்வைஸை ரிஷப் பண்ட்டிற்கு கூறுகிறீர்களே, நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா கோலி?

தோனியின் அட்வைஸை ரிஷப் பண்ட்டிற்கு கூறுகிறீர்களே, நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா கோலி?

தோனி-விராட் கோலி

தோனி-விராட் கோலி

இப்போது கூறுங்கள் எங்கே ஒரு தவறுக்கும் இன்னொரு தவறுக்கும் 8 மாத இடைவெளி இருக்கிறது. ஒரே மாதிரிதான் கோலியிம் அவுட் ஆகிறார், ரிஷப் பண்ட்டும் அவுட் ஆகிறார். ரிஷப் பண்ட்டாவது இருமுறை தான் அவுட், இவரோ ஏகப்பட்ட முறை எட்ஜ் ஆகி அவுட் ஆகி விட்டார். இதில் ரிஷப் பண்ட்டிற்கு இவர் எப்படி அட்வைஸ் வழங்க முடியும்?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது, கடைசி டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடங்கவுள்ள நிலையில் நேற்று நிருபர்களிடம் தன் பார்ம் பற்றி பேசிய விராட் கோலி, கிரிக்கெட்டர்-கரியரிஸ்ட் தோனியிடமிருந்து தான் பெற்ற விலை மதிப்பற்ற அட்வைஸ் குறித்து மனம் திறந்துள்ளார்.

அதாவது, இரண்டு தவறுகளுக்கு இடையே குறைந்தது 8 மாதகால இடைவெளி வேண்டும் என்றாராம் தோனி, அதை அப்படியே உள் வாங்கி கொண்டாராம் கோலி. இதெப்படி இருக்கு? அதாவது ரிஷப் பண்ட் இருமுறை ரபாடாவை மேலேறி வந்து அடிக்கப்போய் அவுட் ஆனதைக் குறிப்பிட்டு கூறுகிறார் கோலி, ஏன் இவர் எத்தனை தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து ஆட்டமிழக்கிறார்?

தோனியிடமிருந்து கிரிக்கெட்டை கற்றுக் கொள்ள முடியுமோ இல்லையோ கரியரை எப்படி வளர்த்துக் கொள்வது, கரியரில் வணிகத்தின் பங்கு என்ன, அல்லது கரியரையே வணிகமாக மாற்றுவது போன்றவற்றை கோலி நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறார் விராட் கோலி.

ஆனா இரண்டு தவறுகளுக்கிடையே குறந்தது 8 மாத கால இடவெளி இருக்க வேண்டும் என்ற தோனியின் அரிய தத்துவ முத்தை கடைப்பிடித்தாரா கோலி என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் கோலி அவுட் ஆவதைப் பாருங்கள், 8 மாத கால இடைவெளி அல்ல, இடைவெளியே இல்லாமல் ஒரே பாணியில் ஆட்டமிழந்து வருகிறார், கோலியின் உடலுக்கும் மட்டைக்குமான இடைவெளிதான் 8 மாதகாலத்தையும் தாண்டி அதிகரித்து வருகிறது. எத்தனை டெஸ்ட் போட்டிகளில் பார்த்து விட்டோம், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே 4வது ஸ்டம்பில் பிட்ச் ஆகும் பந்தை எட்ஜ் செய்து அவுட் ஆவது கிட்டத்தட்ட ஆக்‌ஷன் ரீப்ளே போல் அவருக்கு நடந்து வரும் வேளையில், தோனி 8 மாத கால இடைவெளி தேவை என்று எந்தத் தவறைச் சுட்டிக்காட்டுகிறார்? கோலி எந்தத் தவறை தவறாகப் புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை.

சரி! கோலி என்ன கூறுகிறார் என்பதையே பார்த்து விடுவோம்:

“இது முதல் முறையல்ல எனது ஃபார்ம் ஆய்வுக்கு உட்படுவது "இது எனது வாழ்க்கையில் சில முறை நடந்தது - இங்கிலாந்து 2014 தொடர் அந்த கட்டங்களில் ஒன்றாகும். ஆனால் பாருங்கள், விஷயம் என்னவென்றால், வெளி உலகம் என்னைப் பார்க்கும் லென்ஸிலிருந்து நான் என்னைப் பார்க்கவில்லை, இறுதியில் இன்று நாம் பேசும் தரநிலைகள், என்னுடன் ஒப்பிடப்படுகின்றன, நானே மற்றும் வேறு யாரையும் விட, என்னால் முடிந்ததை அணிக்காக சிறப்பாகச் செய்ய விரும்புவதிலும், அணிக்காகத் தொடர்ந்து செயல்பட விரும்புவதிலும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், அதனால் என்னால் நீண்ட காலமாக அதைச் செய்ய முடிந்தது.

விளையாட்டில் சில நேரங்களில், நீங்கள் விரும்பும் வழியில் விஷயங்கள் நடக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் நாள் முடிவில், ஒரு வீரராக, ஒரு பேட்ஸ்மேனாக, நான் மிக முக்கியமான தருணங்களில் பங்களித்துள்ளேன் என்பதை உணர்கிறேன். கடந்த காலண்டர் வருடத்தில் அணிக்காக இதை செய்திருக்கிறேன். எனக்கு இது மிகவும் பெருமைக்குரிய விஷயம், அணிக்கு நான் தேவைப்படும்போது நான் மிக முக்கியமான பார்ட்னர்ஷிப்களில் ஒரு அங்கமாக பல டெஸ்ட் போட்டிகளில் இருந்திருக்கிறேன்., இறுதியில் அந்த தருணங்கள்எங்களுக்கு முக்கியமானவை.

"எனவே சில நேரங்களில் உங்களின் தீர்ப்பு மையம் மாற வேண்டும். எல்லா நேரங்களிலும் நீங்கள் உங்களைப் பார்த்து, எண்கள் மற்றும் மைல்கற்களின் அடிப்படையில் உங்களை நீங்களே தீர்மானிக்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் எப்பொழுதும் திருப்தியாகவோ மகிழ்ச்சியாகவோ இருக்க முடியாது.

என்னுடைய செயல்பாட்டில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன், மேலும் நான் எப்படி விளையாடுகிறேன் மற்றும் ஒரு சிக்கலான சூழ்நிலையில் அணிக்காக என்னால் என்ன செய்ய முடியும் என்பதில் நான் நிம்மதியாக இருக்கிறேன். நான் அதைச் செய்துகொண்டிருக்கும் வரை, அந்த தருணங்களில் இருப்பதில் பெருமிதமும் உத்வேகமும் இருக்கும் வரை, நான் கவலைப்பட வேறு எதுவும் இல்லை, ஏனென்றால் நிலைமையின் உண்மை என்னவென்றால், இறுதியில் நீங்கள் அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள். எனது சிறந்த முயற்சி எப்போதும் அதைச் செய்வதே, நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என்று நான் நம்புகிறேன்.

“நான் இருக்கும் இடத்தில் நீங்கள் இருக்கும்போது, ​​நீங்களும் தொடர்ந்து நியாயம் தீர்க்கப்படுவீர்கள், அதுதான் வெளி உலகத்தின் வேலை, நான் என்னை அப்படிப் பார்ப்பதில்லை. இரண்டு தவறுகளுக்கு இடையே குறைந்தபட்சம் 7-8 மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும், அப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் உங்கள் கேரியர் வளரும் என்று எம்எஸ் தோனி என்னிடம் ஆரம்பத்திலேயே கூறினார். இதை நான் உள்வாங்கிக் கொண்டேன், அதே தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்பதை உள்வாங்கிக் கொண்டேன். உங்கள் தவறுகளை நீங்கள் சிந்திக்கும்போது தவறு மீண்டும் நடக்காது” என்றார் கோலி.

இப்போது கூறுங்கள் எங்கே ஒரு தவறுக்கும் இன்னொரு தவறுக்கும் 8 மாத இடைவெளி இருக்கிறது. ஒரே மாதிரிதான் கோலியிம் அவுட் ஆகிறார், ரிஷப் பண்ட்டும் அவுட் ஆகிறார். ரிஷப் பண்ட்டாவது இருமுறை தான் அவுட், இவரோ ஏகப்பட்ட முறை எட்ஜ் ஆகி அவுட் ஆகி விட்டார். இதில் ரிஷப் பண்ட்டிற்கு இவர் எப்படி அட்வைஸ் வழங்க முடியும்? கடந்த முறை குடும்பத்துக்காக கிரிக்கெட்டை விட்டு விடுப்பு எடுத்துக் கொண்டதற்கும் இப்போது விடுப்பு எடுத்துக் கொண்டதற்கும் வேண்டுமானால், இந்த தவறுகளுக்கு இடையே வேண்டுமானால் கோலியின் கேரியரில் 8 மாதத்துக்கும் மேல் இடைவெளி இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
Published by:Muthukumar
First published:

Tags: Captain Virat Kohli, Dhoni, India vs South Africa, Rishabh pant

அடுத்த செய்தி