ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென்னாப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்ய காத்திருக்கும் விராட் படை!

தென்னாப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்ய காத்திருக்கும் விராட் படை!

இந்திய அணி

இந்திய அணி

புஜாரா மற்றும் ரஹானேவும் இந்த டெஸ்ட் தொடரில் ஃபார்முக்கு திரும்பி உள்ளதால் பேட்டிங்கில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியையும் வென்று தென்னாப்பிரிக்கா அணியை ஒயிட் வாஷ் செய்ய கோலி தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் தொடங்க உள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில் 3வது டெஸ்டிலும் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளனர்.

இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை தொடக்க வீரர் ரோஹித் சர்மா, கேப்டன் விராட் கோலி, மயங்க் அகர்வால் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். புஜாரா மற்றும் ரஹானேவும் இந்த டெஸ்ட் தொடரில் ஃபார்முக்கு திரும்பி உள்ளதால் பேட்டிங்கில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

அதேப் போன்று பவுலிங்கிலும் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டிப் போட்டு தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட்டை வேட்டையாடி வருகின்றனர். அஸ்வின் சுழற்பந்து வீச்சில் ஜாலம் செய்து வருகிறார். வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஜொலிக்கின்றனர். அனுபவ வீரர் இஷாந்த் சர்மா விக்கெட் எடுப்பதில் சற்று திணறி வருகிறார்.

தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை தொடக்க வீரர் மார்க்ரம் காயம் காரணமாக கடைசி டெஸ்டிலிருந்து விலகி உள்ளதால் அந்த அணிக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேப்டன் டூ-பிளிசிஸ் மட்டுமே சற்று நிதனமாக ஆடி வருகிறார். முதல் டெஸ்டில் சதமடித்த எலாகர் அதன்பின் சரியாக விளையாடமல் உள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து இந்திய தொடரில் கைக்கொடுக்காமல் உள்ளது. ரபாடா வேகம் மட்டுமே அவ்வப்போது தென்னாப்பிரிக்காவிற்கு ஆறுதல் அளித்து வருகிறது.

ராஞ்சி டெஸ்டிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தென்னாப்பிரிக்கா அணியை ஒயிட்வாஷ் செய்யும். அதே சமயத்தில் ஆறுதல் வெற்றிக்காக தென்னாப்பிரிக்கா அணியும் போராடி வருவதால் ராஞ்சி டெஸ்ட் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பாரக்கப்படுகிறது.

Also Watch

First published:

Tags: India vs South Africa 2019, Test cricket