ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டி20… இந்தியா வெற்றிபெற 228 ரன்கள் இலக்கு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டி20… இந்தியா வெற்றிபெற 228 ரன்கள் இலக்கு

100 ரன்கள் விளாசிய தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ரூசோ.

100 ரன்கள் விளாசிய தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ரூசோ.

தொடர்ந்து அதிரடி காட்டிய ரூசோ 48 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார். இதில் 8 சிக்சரும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 228 ரன்களை இலக்காக தென்ஆப்பிரிக்க அணி நிர்ணயித்துள்ளது.

  தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், அடுத்ததாக கவுகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

  இந்த நிலையில் இன்று இந்தூர் மைதானத்தில் மூன்றாவது 20 ஓவர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் மற்றும் கேப்டன் தெம்பா பவுமா ஆகியோர் களத்தில் இறங்கினர்.

  தெம்பா 3 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 30 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில் இருந்த போது குவின்டன் டி காக் உடன் ரிலீ ரூசோ இணைந்தார்.

  இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது குவின்டன் டி காக் 4 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 68 ரன்களை எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ரூசோ 48 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார். இதில் 8 சிக்சரும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.

  5 பந்துகளை சந்தித்த டேவிட் மில்லர் 3 சிக்சர்களை விளாசி 19 ரன்களை அதிரடியாக சேர்த்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை எடுத்துள்ளது. 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Cricket