India vs SA 3rd T20: இந்திய அணியில் 3 மாற்றங்கள்?- வாழ்வா சாவா போட்டியில் வெல்லுமா?
India vs SA 3rd T20: இந்திய அணியில் 3 மாற்றங்கள்?- வாழ்வா சாவா போட்டியில் வெல்லுமா?
உம்ரன் மாலிக் வலைப்பயிற்சியில்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்து இன்று நடைபெறும் 3வது போட்டியில் வென்றால்தான் தொடரை தக்க வைக்க முடியும் நிலை ஏற்பட்டுள்ளது, இதற்காக அணியில் 3 மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாகப்பட்டிணம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றேயாக வேண்டும், அதற்கு டாஸ் வெல்ல வேண்டும், அவர்களை முதலில் பேட் செய்யச் சொல்லி சேஸ் செய்ய வேண்டும் ருதுராஜ் கெய்க்வாடை டீமை விட்டுத் தூக்கி விட்டு இஷான் கிஷனுடன் ரிஷப் பண்ட்டை ஓப்பனிங்கில் இறக்கி தீபக் ஹூடாவை அணியில் கொண்டு வர வேண்டும் அதே போல், பவுலிங்கில் ஆவேஷ் கானுக்குப் பதில் உம்ரன் மாலிக், அக்சர் படேலுக்குப் பதில் அர்ஷ்தீப் சிங் அவர வேண்டும்.
புவனேஷ்வர் குமார் நீங்கலாக எந்த பவுலரும் தேறவில்லை. தென் ஆப்பிரிக்கா ஒன்றும் ஏப்ப சோப்பையான அணியல்ல கடந்த 14 டி20 சர்வதேச போட்டிகளில் 13 போட்டிகளில் வென்றுள்ளனர். இதில் சேஸ் செய்த 7 போட்டிகளிலும் வென்றுள்ளனர். அந்த அணி மாறியிருக்கிறது, அவர்கள் ஒர்க் அவுட் செய்கிறார்கள், ஆனால் இந்திய அணியில் திட்டம் எதுவும் இல்லை, ராகுல் திராவிட் என்ன செய்வார்? சொத்தையான அணியை கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?
ரிஷப் பண்ட் கேப்டன்சியும் கேள்வியே அவரது பேட்டிங்கும் கேள்வியே, அவர் இன்னும் டி20 கிரிக்கெட்டின் தாரக மந்திரத்தை கண்டடையவில்லை. அதனால் அவரை ஓப்பனிங்கில் பவர் ப்ளேயில் இறக்கி விட்டு ஆடச்சொன்னால் இழந்த நம்பிக்கையை அவர் பெறுவார். இன்று ஷ்ரேயஸ் அய்யரை உட்கார வைத்து விட்டு தீபக் ஹூடாவை எடுக்கவும் ஒரு வாய்ப்பு உள்ளது.
தென் ஆப்பிரிக்கா (உத்தேசம்)- ரீசா ஹென்றிக்ஸ், தெம்பா பவுமா, ரசீ வாண்டெர் டசன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், வைன் பிரிட்டோரியஸ், வைன் பார்னெல், ரபாடா, இங்கிடி, நார்ட்யே, ஷம்ஸி.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.