ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வெற்றியை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி : தென்ஆப்பிரிக்காவை வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா!

வெற்றியை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி : தென்ஆப்பிரிக்காவை வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா!

விளையாட்டு

விளையாட்டு

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரையும் வெல்ல, இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி, முதலில் நடைபெற்ற டி-20 தொடரை இழந்தது.

  இதையடுத்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

  இந்நிலையில், வெற்றிக் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நண்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

  சொந்த மண்ணில் கடைசியாக நடைபெற்ற இரு நாடுகளுக்கும்  இடையிலான 7 ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில், இந்தியா ஒன்றை மட்டுமே இழந்துள்ளது. எனவே, தவான் தலைமையிலான இந்திய அணி, தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Cricket, Sports