ஏம்ப்பா ராகுல் அது ஷ்ரேயஸ் அய்யர்... வெங்கடேஷ் அய்யர் இல்லை- நெட்டிசன்கள் கேலி மழை
ஏம்ப்பா ராகுல் அது ஷ்ரேயஸ் அய்யர்... வெங்கடேஷ் அய்யர் இல்லை- நெட்டிசன்கள் கேலி மழை
ஸ்ரேயஸ் அய்யர்
கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 6வது பந்துவீச்சாளர் இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் ஸ்ரேயாஸ் ஐயரிடம் பந்தை ஒப்படைத்தார். ஆஃப் ஸ்பின்னர் தனது 3 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்தார், இதனையடுத்து நெட்டிசன்கள் கே.எல்.ராகுல் கேப்டன்சியை கிண்டல் செய்வதில் உச்சத்துக்குச் சென்றனர்.
கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 6வது பந்துவீச்சாளர் இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் ஸ்ரேயாஸ் ஐயரிடம் பந்தை ஒப்படைத்தார். ஆஃப் ஸ்பின்னர் தனது 3 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்தார், இதனையடுத்து நெட்டிசன்கள் கே.எல்.ராகுல் கேப்டன்சியை கிண்டல் செய்வதில் உச்சத்துக்குச் சென்றனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்று தொடரை தென் ஆப்பிரிக்கா 3-0 என்று கைப்பற்றியது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்றதன் மூலம், தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே தொடரை சீல் செய்த நிலையில் நேற்ரு கிளீன் ஸ்வீப் செய்தது.
3வது ஒருநாள் போட்டியில் இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்திய கேப்டன் கேஎல் ராகுல் அணியில் மாற்றங்களை செய்தார் புவனேஷ்வர் குமார், ஆர் அஷ்வின், ஷர்துல் தாக்கூர் இல்லை. ஜெயந்த் யாதவ், தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக விளையாடும் லெவன் அணியில் இடம் பிடித்தனர்.
ஷர்துல் மற்றும் வெங்கடேஷ் இல்லாதது ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தது, ஏனெனில் இந்தியா இப்போது விளையாடும் லெவனில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லை. வெங்கடேஷ் ஐயர் இல்லாததால் பார்வையாளர்கள் 6வது பந்துவீச்சாளர் இல்லாமல் ஆடினர்.
6வது பந்து வீச்சாளர் இல்லாத நிலையில், 3வது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் பந்தை ராகுல் ஒப்படைத்தார் அவரும் மூன்று ஓவர்கள் வீசினார். அவரிடம் பந்து வீச பந்தை கொடுத்ததையடுத்து நெட்டிசன்கள், கே.எல்.ராகுலின் முடிவை கலாய்த்துத் தள்ளி விட்டனர். அதில் குறிப்பாக ஸ்ரேயஸ் அய்யரை தவறாக வெங்கடேஷ் அய்யர் என்று நினைத்து விட்டார் போலும் ராகுல் என்ற கிண்டல் வைரலானது. ஸ்ரேயஸ் அய்யர் வைரலனார்.
Shreyas Iyer bowling!
Maybe KL Rahul mistook V.Iyer for S.Iyer and S.Iyer for V.Iyer
விளையாட்டைப் பற்றி பேசுகையில், தென் ஆப்பிரிக்கா ஆரம்ப விக்கெட்டுகளை இழந்த பிறகு திடமாக மீண்டெழுந்தது. குயின்டன் டி காக்கின் 124 ரன்களில் 200 ரன்களை கடந்தது. 59 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸனுடன் 4வது விக்கெட்டுக்கு டி காக் 144 ரன்கள் சேர்த்தார்.
டி காக் தனது 17வது ஒருநாள் சதத்தின் போது பல சாதனைகளை முறியடித்தார். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இப்போது இந்தியாவுக்கு எதிராக 6 சதங்களைப் பெற்றுள்ளார் மற்றும் பட்டியலில் சனத் ஜெயசூர்யாவுக்குப் பின்னால் மட்டுமே உள்ளார். இலங்கையின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் இந்தியாவுக்கு எதிராக 7 சதங்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.