ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய அணியில் அபார பந்துவீச்சால் சொற்ப ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்க அணி

இந்திய அணியில் அபார பந்துவீச்சால் சொற்ப ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்க அணி

இந்திய அணி அபார பந்துவீச்சு

இந்திய அணி அபார பந்துவீச்சு

இந்திய அணி தரப்பில் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4.1 ஓவர்களை வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் அந்த அணி 99 ரன்களுக்கு சுருண்டது

    இந்தியாவ சுற்றுபயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டி கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ள நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    Also Read: பிசிசிஐ-க்கு புதிய தலைவர்? அடுத்த முக்கிய பொறுப்புக்கு நகரும் கங்குலி

    அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. கலிசன் மட்டும் நிதனமாக விளையாடி 34 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 27.1ஓவர்களில் அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 99ரன்களை மட்டுமே எடுத்தது.

    Image
    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் குல்தீப் யாதவ்

    இந்திய அணி தரப்பில் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4.1 ஓவர்களை வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் வாஷிங்க்டன் சுந்தர் ,முகமது சிராஜ் ,சபாஷ் அமகது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Delhi, India vs South Africa, ODI