Home /News /sports /

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 122 ரன்கள் தேவை

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 122 ரன்கள் தேவை

2 நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் சூழலில் இரு அணிகளுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2 நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் சூழலில் இரு அணிகளுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2 நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் சூழலில் இரு அணிகளுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்று 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை எடுத்துள்ளது.

    இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ் பெர்க் நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களை எடுத்தது.

    இதையும் படிங்க : அரைசதம் எடுத்து புஜாரா, ரகானே சேலஞ்ச், ரிஷப் பண்ட் டக் அவுட்- ரபாடா அபாயகர பவுலிங்- இந்தியா 140 ரன் முன்னிலை

    பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வதுஇன்னிங்சை ஆடிய இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா 53 ரன்களையும், ரஹானே 58 ரன்களையும் எடுத்தனர். ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ஹனுமா விஹாரி 40 ரன்களை சேர்த்தார். 60.1 ஓவர் தாக்குப்பிடித்த இந்திய அணி 266 ரன்களை எடுத்தது.

    இதையும் படிங்க : 'யார்றா நீ, எங்கேந்துறா புடிச்சாங்க உன்னை'- ஷர்துல் தாக்கூரிடம்  அஸ்வின் தமிழில் கூறிய வைரல் வீடியோ

    இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் அதிரடியாக விளையாடி 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் டீன் எல்கர் மற்றும் கீகர் பீட்டர்சன் இணை, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கீகன் 28 ரன்கள் எடுத்திருந்தபோது அஷ்வின் சுழலில் ஆட்டமிழந்தார்.

    இதையும் படிங்க : கங்குலி குடும்பத்தில் 4 பேருக்குக் கொரோனா தொற்று

    தற்போது 46 ரன்களுடன் கேப்டன் எல்கரும், 11 ரன்களுடன் ராஸி வான்டர் டசனும் களத்தில் உள்ளனர். இன்னும் வெற்றிக்கு 122 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் சூழலில் இரு அணிகளுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரம் பொறுமையாக விளையாட ஓவரும், விக்கெட்டும் கைவசம் இருப்பதால் தற்போதைய சூழலில் தென்னாப்பிரிக்க அணியின் கையே ஓங்கியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Cricket

    அடுத்த செய்தி