Home /News /sports /

அரைசதம் எடுத்து புஜாரா, ரகானே சேலஞ்ச், ரிஷப் பண்ட் டக் அவுட்- ரபாடா அபாயகர பவுலிங்- இந்தியா 140 ரன் முன்னிலை

அரைசதம் எடுத்து புஜாரா, ரகானே சேலஞ்ச், ரிஷப் பண்ட் டக் அவுட்- ரபாடா அபாயகர பவுலிங்- இந்தியா 140 ரன் முன்னிலை

ரபாடா அபாரம், ரகானே, புஜாரா, ரிஷப் பண்ட் டக் அவுட். 3 விக். ரபாடா

ரபாடா அபாரம், ரகானே, புஜாரா, ரிஷப் பண்ட் டக் அவுட். 3 விக். ரபாடா

ஜொகான்னஸ்பர்க், வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ரகானே, புஜாரா இருவரும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அரைசதம் எடுத்ததோடு 3வது விக்கெட்டுக்காக சதக்கூட்டணி அமைத்து இந்திய முன்னிலையை வலுவாக்கியுள்ளனர். ஆனால் இருவருமே அரைசதம் எடுத்து ரபாடாவிடம் ஆட்டமிழந்தனர்.

மேலும் படிக்கவும் ...

    புஜாரா 53 ரன்கள் எடுத்தும், ரகானே 58 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்க இந்திய அணி 163/4 என்று 136 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, ஹனுமா விகாரி, ரிஷப் பண்ட் களத்தில் இருக்கின்றனர்.

    முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் பாசிட்டிவ் ஆக ஆடி ரன் ரேட்டை உயர்த்தினர் ரகானேவும், புஜாராவும். 85/2 லிருந்து முதல் டிரின்க்ஸ் பிரேக்கின் போது 151/2 என்று உள்ளனர். அதாவது 66 ரன்களை 14 ஓவர்களில் எடுத்து ஆக்ரோஷமாக ஆடி வருகின்றனர். ரகானே 78 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்தும் புஜாரா 86 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தும் ரபாடாவிடம் ஆட்டமிழந்தனர்.

    ரகானே, ஆலிவியர் பந்தை பிரமாதமாக 4வது ஸ்லிப் வழியாக பவுண்டரிக்கு விரட்டி 67 பந்துகளில் தன் அரைசதத்தை எடுத்தார். கடைசியில் 58 ரன்கள் எடுத்து ரபாடாவின் எழுச்சி மிகு லெக் கட்டருக்கு எட்ஜ் ஆகி வெளியேறினார், புஜாரா, ரகானே இணைந்து 111 ரன்களை எடுத்தனர். புஜாரா ரபாடாவின் இன்ஸ்விங்கரை நேராக கால்காப்பில் வாங்கினார், தவறான லைனில் ஆட பிளம்ப் எல்.பி.ஆகி ரிவியூவையும் விரயம் செய்து வெளியேறினார்.

    இருவரும் சேர்ந்து 23 ஓவர்களில் 111 ரன்களை சேர்த்தனர், காலையில் இந்திய அணி பிட்சில் ஹெவி ரோலர் போடக்கேட்டது இதனால் பிட்ச் கொஞ்சம் பிளாட் ஆக உள்ளது, ஆனால் அவ்வப்போது பந்துகல் எகிறுகின்றன, ரகானே விரல்களை ஒருமுறை ரபாடா பதம் பார்த்தார்.

    ஆனால் புஜாரா இன்று தொடங்கியவுடனேயே லுங்கி இங்கிடி வீசிய முதல் ஓவரில் ஒரு கிளான்ஸ் மற்றும் ஒரு ஆன் டிரைவ் பவுண்டரிகளை விளாசினார். யான்செனை ரகானே நேர் பவுண்டரிக்கு விரட்டினார். பிறகு ரகானே இதே இடது கை ஒல்லி உயர பவுலர் யான்சென் ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை வீச ரகானேவும் பந்துடனேயே எழும்பி தேர்ட் மேனில் அப்பர் கட் செய்து சிக்சருக்கு விரட்டினார்.

    பிறகு இங்கிடி வீசிய ஒரு ஓவரில் ரகானே, புஜாரா இருவரும் ஒரு பவுண்டரியை அடித்து ஆக்ரோஷமாக ஆடினர். தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சும் சாமானியமாகவே இருந்தது. கடைசியில் ஆலிவர் பந்தை ஜெண்டிலாக ஸ்கொயர் லெக்கில் தட்டி விட்டு புஜாரா தனது 32வது டெஸ்ட் சதத்தை எடுத்தார், செப்.2021-ல் ஓவலில் இங்கிலாந்துக்கு எதிராக 61 எடுத்த பிறகு இடையில் ஒரு 47 இப்போது ஒரு அரைசதம் என்பது புஜாராவின் வரலாறு. ஆனால் இந்த அரைசதத்தை 80% ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார் புஜாரா. இப்போது இருவருமே பெவிலியனில். இந்தியா 140 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cheteshwar Pujara, India vs South Africa, Rahane, Rishabh pant

    அடுத்த செய்தி