தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டமான நேற்று தென் ஆப்பிரிக்கா அணியை 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கிய பெருமை ஷர்துல் தாக்கூருக்கே சேரும், இவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது ஒரு சாதனை பந்து வீச்சாகும். தென் ஆப்பிரிக்காவில் ஸ்ரீநாத் சாதனையை முறியடித்து ஷர்துல் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்திய அணி முதல் ஒரு மணி நேரம் விக்கெட்டுகள் எடுக்க திணறியது, டீன் எல்கரும், கீகன் பீட்டர்சனும் பிரமாதமாக ஆடினர். ஆனால் முகமது சிராஜும் காலில் காயத்தினால் சரியாக வீச முடியவில்லை, அப்போதுதான் ஷர்துல் தாக்கூரிடம் பந்தைக் கொடுக்க தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தினார் 61 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா வெறும் 27 ரன்களையே கூடுதலாக எடுக்க முடிந்தது.
ஷர்துல் இதுவரை விக்கெட்டுகளை எடுத்து பங்களிப்பு செய்துள்ளாரே தவிர இப்படி எதிரணியினரை சிதைக்கும் பந்து வீச்சை வீசியதில்லை, இங்கிலாந்து தொடரில் ஜோ ரூட் விக்கெட்டை இவர்தான் எடுத்துக் கொடுத்தார். ஆனால் நேற்று இவர் எதிரணியினரை சிதைக்கும் ஆக்ரோஷ பவுலராக திகழ்ந்தார்.
ஷர்துல் விக்கெட் மேல் விக்கெட்டாக வீழ்த்த அஸ்வினால் தாங்க முடியாமல் தமிழில் பாராட்டி ஆச்சரிய தொனியில் கூறியது ஸ்டம்ப் மைக் பிடித்து விட அதன் வீடியோ வைரலாகியுள்ளது: அதில் அஸ்வின் “யார்றா நீ, எங்கேந்துறா புடிச்சாங்க உன்னை, நீ பால் போட்டாலே விக்கெட் விழும்” என்று தமிழில் கூறியது தற்போது வைரலாகியுள்ளது:
Ash being heard on the stump pic after Thakur's 4th wicket:
"Yarra nee, engendhu da pudichanga unna? Nee ball potaale wicket vizhum"
😂😂😂😂😂
— Srini Mama (@SriniMaama16) January 4, 2022
இந்தியா இன்று ஆட்டம் தொடங்கி 2 விக்கெட்டுகளுக்கு101 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. புஜாரா ஆக்ரோஷ வழியில் சென்று கொண்டிருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.