Home /News /sports /

India vs South Africa| மழை எப்போது நிற்கும்?- 4ம் நாள் ஆட்டம் எப்போது தொடங்கும்?- 40 ஓவர் நடந்தால் போதும்

India vs South Africa| மழை எப்போது நிற்கும்?- 4ம் நாள் ஆட்டம் எப்போது தொடங்கும்?- 40 ஓவர் நடந்தால் போதும்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா 2வது டெஸ்ட் 4ம் நாள், மழையால் பாதிப்பு

இந்தியா-தென் ஆப்பிரிக்கா 2வது டெஸ்ட் 4ம் நாள், மழையால் பாதிப்பு

இந்திய - தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகியுள்ளது. எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை, தொடங்குமா என்றே தெரியவில்லை.  தென் ஆப்பிரிக்கா அணி 118/2 என்று வெற்றிக்கு இன்னமும் 122 ரன்கள் தேவை என்ற நிலையில் உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்திய - தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகியுள்ளது. எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை, தொடங்குமா என்றே தெரியவில்லை.  தென் ஆப்பிரிக்கா அணி 118/2 என்று வெற்றிக்கு இன்னமும் 122 ரன்கள் தேவை என்ற நிலையில் உள்ளது.

    மாறாக இந்திய அணிக்கு 8 விக்கெட்டுகள் தேவை இதை விரைவில் எடுத்து வெற்றி பெற்று விட்டால் தென் ஆப்பிரிக்காவிலும் கொடி நாட்டி, டெஸ்ட் தொடரை வென்ற முதல் துணைக்கண்ட அணி என்ற வரலாற்றை நிகழ்த்தும் முன்பு ஆஸ்திரேலியாவில் விராட் கோலி படை துணைக்கண்டத்துக்கே பெருமை சேர்க்கும் விதமாக முதல் தொடர் வெற்றியை 2018-ல் சாதித்தது, பிறகு 2021-ல் ரகானே தலைமையில் ஒன் மோர் ரிபீட் செய்தது. இந்த இரண்டும் வரலாறு என்றால், இப்போது தென் ஆப்பிரிக்காவிலும் வரலாறு படைக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் மழை வந்து 4ம் நாள் ஆட்டத்தை காலி செய்து விடும் போல் தெரிகிறது.

    முதல் நாளில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 79.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 7, முகமது ஷமி 2 , பும்ரா 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர். நேற்று 3-ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 266 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டை இழந்தது. சிறப்பாக விளையாடிய புஜாரா 53, ரகானே 58 ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஷர்துல் தாக்கூர் 24 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 28 ரன்கள் விளாசினார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா, யான்சென் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். குறிப்பாக ரபாடா கொலவெறியில் வீசினார்.

    இதன் பிறகு 240 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சூழலில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. டீன் எல்கர் 46 ரன்களுடனும் அதிரடி வீரர் வான் டெர் டியூசன் 11 ரன்களுடனும் இருக்கின்றனர்.

    இந்நிலையில் ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் மழை பெய்து வருவதால் இன்று நடைபெற இருந்த நான்காம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு 40 ஓவர் சாத்தியமானால் கூட ஏதாவது ஒரு முடிவு ஏற்பட்டு விடும். ஆனால் காலை முதல் அங்கு விட்டு விட்டு மழை பெய்து கொண்டேயிருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

    உணவு இடைவேளைக்குப் பிறகு ஒருமுறை கவர் எடுத்துச் செல்லப்பட்டது, ஆனால் மீண்டும் மழை வர பிட்ச்சில் கவர் போடப்பட்டது. மொத்தத்தில் ஆட்டம் ஆரம்பிப்பது போல் தெரியவில்லை என்கிறது அங்கிருந்து வரும் செய்திகள்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa

    அடுத்த செய்தி