தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனையடுத்து புனேவில் இன்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் ஹனுமன் விஹாரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஸ் யாதவ் அணியில் இடம்பெற்றிருந்தார். இதேப்போன்று தென்னாப்பிரிக்கா அணியிலும் சுழற்பந்து வீச்சாளர் டேன் பைட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். ரோஹித் சர்மாவிற்கு இது 50வது டெஸ்ட் போட்டியாகும். முதல் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் சதம் அடித்ததால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்திய அணி 25 ரன்கள் எடுத்திருந்த போது ரோஹித் சர்மா அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
வேகப்பந்து வீச்சாளர் ராபடா பந்துவீச்சில் ரோஹித் 14 ரன்களில் வெளியேறினார். அவருக்கு அடுத்து களமிறங்கி புஜாரா - மயங்க் அகர்வால் நிதனமாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் புஜாரா 58 ரன்களில் அவுட்டாகினார். இந்திய அணியின் 2வது விக்கெட்டையும் ராபடா வெளியேற்றினார்.
கேப்டன் விராட் கோலி 4வது வீராக களமிறங்கினார். மறுமுனையில்பொறுப்புடன் விளையாடிய மயாங் அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது 2வது சதத்தை பதிவு செய்துள்ளார். 6டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள மயங்க் அகர்வால் 2 சதம் மற்றும் 3 அரைசதம் விளாசி உள்ளார்.
மயங்க் அகர்வால் 108 ரன்கள் எடுத்திருந்த போது ராபடா பந்துவீச்சில் சிக்கினார். அகர்வாலை தொடர்ந்து கேப்டன் ரஹானே களமிறங்கி மிக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் விராட் கோலி சற்று அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இந்திய அணி 273 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் 85.1 ஓவரில் முதல் நாள் ஆட்டம் முடிவு பெற்றது. கேப்டன் கோலி 105 பந்துகளில் 63 ரன்களுடனும் ரஹானே 70 பந்துகளில் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்கவுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையில் சேவாக்கிற்கு அடுத்ததாக மயங்க் அகர்வால் இணைந்துள்ளார்.
Also Watch : உலகநாடுகள் இந்திய விளையாட்டுத் துறையின்வளர்ச்சியில் கைகோர்க்கவேண்டும்
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.