Home /News /sports /

IND vs SA| கடுமையா சொல்லணும்னா முதல் இன்னிங்ஸ் சொதப்பல்தான் காரணம்- தோல்வி குறித்து திராவிட்

IND vs SA| கடுமையா சொல்லணும்னா முதல் இன்னிங்ஸ் சொதப்பல்தான் காரணம்- தோல்வி குறித்து திராவிட்

ராகுல் திராவிட்

ராகுல் திராவிட்

இந்தத் தோல்வி குறித்து தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறும்போது, கடுமையாக ஏதாவது சொல்லணும்னா முதல் இன்னிங்ஸ் பேட்டிங் சொதப்பல்தான் காரணம் என்றார்:

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் உடம்பில் விழுப்புண்களுடன் நின்று தீரனாக 96 நாட் அவுட் என்று தென் ஆப்பிரிக்க அணியை கடினமான பிட்சில் கடினமான இந்தியப் பந்து வீச்சுக்கு எதிராக வெற்றிக்கு இட்டுச் சென்றார். தொடரை தென் ஆப்பிரிக்கா சமன் செய்தது. இது இந்திய அணிக்கு அதிர்ச்சிதான்.

    இந்தத் தோல்வி குறித்து தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறும்போது, கடுமையாக ஏதாவது சொல்லணும்னா முதல் இன்னிங்ஸ் பேட்டிங் சொதப்பல்தான் காரணம் என்றார்:

    “இரு அணிகளுக்குமே சவாலான பிட்ச் இது. இந்த 4வது இன்னிங்ஸ்தான் தென் ஆப்பிரிக்காவின் சிறந்த இன்னிங்ஸ் கூட. பிட்ச் கடினம்தான், அதனால் பேட்ஸ்மென்களை ஆதரிக்கிறேன். ஆனால் நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இன்னும் கொஞ்சம் பெட்டராக ஆட வேண்டும் இன்னும் முன்னேற்றம் தேவை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

    பேட்ஸ்மென்கள் முக்கியத் தருணங்களைக் கைப்பற்ற வேண்டும். கூட்டணி அமையும் போது அதை இன்னும் அதிக நேரம் நீட்டிக்க வேண்டும். முதல் இன்னிங்ஸில் சில தருணங்கள் சவாலாக இருந்தன. பந்து நன்றாக எகிறின. முதல் இன்னிங்சில் 60-70 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் போதுமானதாக இருந்திருக்கும். ஆட்டமே வித்தியாசமாக மாறியிருக்கும்.

    Also Read: அவர் கிட்ட நிச்சயமா பேசுவோம், என்ன ஷாட் அது?- ரிஷப் பண்ட் மீது திராவிட் கோபம்


     ஆம், இன்னும் கொஞ்சம் பெட்டராக பேட் செய்ய வேண்டும். நன்றாக தொடங்குபவர்கள் சதம் எடுக்க வேண்டும். முதல் டெஸ்ட்டில் இதுதான் நடந்தது, ராகுல் சதம் எடுத்தார். 2வது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா அணியில் டீன் எல்கர் 96 ரன்கள் என்று சதத்துக்கு அருகில் வந்தார். அதனால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. யாராவது ஒருவர் சதமெடுக்க வேண்டும்.



    பேட்டிங் சுலபமல்ல இங்கு, ஆனால் செட்டில் ஆகிவிட்ட பேட்டர் தன் விக்கெட்டை விட்டுக் கொடுக்கக் கூடாது பெரிய ஸ்கோர் நோக்கி செல்ல வேண்டும். அந்த 60-70 ரன்கள் தான் போட்டியின் முடிவில் வித்தியாசத்தை தோற்றுவிக்கிறது” என்றார் ராகுல் திராவிட்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, Rahul Dravid

    அடுத்த செய்தி