Home /News /sports /

கோலி ஸ்டைலில் சண்டைக்கோழி ஆகாதீங்க பும்ரா, பவுலிங்கில் கவனம் செலுத்துங்க

கோலி ஸ்டைலில் சண்டைக்கோழி ஆகாதீங்க பும்ரா, பவுலிங்கில் கவனம் செலுத்துங்க

பும்ரா-யான்சென் சண்டை

பும்ரா-யான்சென் சண்டை

இங்கிலாந்து தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனை வம்பிழுத்து வெற்றி கண்டதிலிருந்து ருசி கண்ட பூனையாக மாறிவிட்டாரோ பும்ரா? இப்போது ருசி கண்ட பூனையிலிருந்து சண்டைக்கோழியாக மாறியுள்ளார். நேற்று தென் ஆப்பிரிக்கா இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்க்கோ யான்செனுடன் தேவையில்லாமல் வாய்ச்சண்டை போட்டார் பும்ரா.

மேலும் படிக்கவும் ...
  இங்கிலாந்து தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனை வம்பிழுத்து வெற்றி கண்டதிலிருந்து ருசி கண்ட பூனையாக மாறிவிட்டாரோ பும்ரா? இப்போது ருசி கண்ட பூனையிலிருந்து சண்டைக்கோழியாக மாறியுள்ளார். நேற்று தென் ஆப்பிரிக்கா இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்க்கோ யான்செனுடன் தேவையில்லாமல் வாய்ச்சண்டை போட்டார் பும்ரா.

  பும்ராவையெல்லாம் ரவிசாஸ்திரி, விராட் கோலி கூட்டணி எப்படி கெடுத்துக் குட்டிச்சுவராக்கியுள்ளது என்பதைப் பார்க்க முடிந்தது, ஆக்ரோஷம் பவுலிங்கில் இருக்க வேண்டும், கவனம் சிதறியதால் நேற்று தென் ஆப்பிரிக்கா எடுத்த 118 ரன்களில் 10 ஓவர் 42 ரன்களை விட்டுக் கொடுத்தார், இன்று இவர் ஒழுங்காக வீசினால், ரபாடாவின் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை உருவிக் கொண்டால் நிச்சயம் இந்திய அணி வெற்றிப்பாதைக்குத் திரும்பும் அதற்கு ராகுல் கேப்டனாக பும்ராவிடம் பேச வேண்டும்.

  நியூசிலாந்து எப்படி தொழில்பூர்வமாக ஆடி நம்மை வென்றார்களோ அதுதான் மாடல், ஆஸ்திரேலியாவே இப்போதெல்லாம் சண்டைக்கோழி வேலை, ஸ்லெட்ஜிங் எல்லாவற்றையும் கைவிட்டு விட்டனர்.

  நேற்று நடந்தது என்ன?

  3ம் நாள் ஆட்டத்தின் இந்தியா பேட்டிங் செய்த போது 54வது ஓவர்தான் இதற்குக் காரணம். இந்தியா 230/8. யான்சென், பும்ராவுக்கு ஏகப்பட்ட ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகளை வீசினார். பும்ரா குனியாமல் ஷாட் ஆடவே பார்த்தார். ஆனால் இதோடு நிற்காமல் யான்செனிடம் வாய்ச்சண்டையில் ஈடுபட்டார். இத்தனைக்கும் யான்சென் 3 மாதங்களுக்கு முன்புதான் இவரது மும்பை இந்தியன்ஸ் சகா, இது வேறு விஷயம்.

  இதையும் படிங்க: வெற்றி யாருக்கு? ஷர்துல் தாகூர், ஹனுமா விகாரி, ரபாடா, டீன் எல்கர் தினம்- வெற்றி பெறுமா இந்தியா?

  உங்கள் விருப்பம்: ரபாடா என்ன டெல்லி கேப்பிடல்ஸ் நெட் பவுலரா? ரிஷப் பண்ட் ஒரு ‘ஹைப்’, ‘சின்னப்பையன்’என்று நிரூபித்த ரபாடா

  யான்செனின் பவுன்சர் ஒன்று பும்ராவின் வலது கையை தட்டிச் செல்ல, பும்ரா ஏதோ தூசியைத் தட்டி விடுவதுபோல் செய்கை செய்து அவரை தூண்டி விட்டார். ஆனால் பந்தில் பேசிய யான்சென் இன்னொரு பவுன்சரை வீசி பும்ராவின் ஹெல்மெட்டில் கொடுத்தார். யான்செனும் சில வார்த்தைகளை பேச, பும்ராவும் கோபமடைய தகராறு கொஞ்சம் சீரியசானது.

  பிட்சில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேர் மோதும் சூழல் ஏற்பட்டது. பிறகு நடுவர்கள், இரு அணி வீரர்கள், கேப்டன் டீன் எல்கர் கோபக்கனல்களை அடக்கினர். கடைசியில் யான்சென் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதை பும்ரா தடுக்க முடிந்ததா? ஆனால் கவனம் இழந்த பும்ரா ஆளடிக்கும் பவுலிங்கைச் செய்து விக்கெட்டை வீழ்த்த முடியாமல் 10 ஒவர்களில் 42 ரன்களை விட்டுக் கொடுத்து பரிதாபமாக முடிந்தார்.

  இப்போதுதான் 100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் பும்ரா அதற்குள் 300 விக்கெட்டுகளை எடுத்த திமிர் கூடாது . இது கோலி மீது ரவி சாஸ்திரி செலுத்திய நெகட்டிவ் தாக்கத்தின் மறுபிரதிபலிப்பு, இதைக் கைவிட்டு பவுலிங்கில் கவனம் செலுத்துங்க பும்ரா? சவால் விட்டு, மீசை முறுக்கி விசில் அடித்து இன்று விராட் கோலி ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் உள்ளே காயம் என்று உட்கார்ந்திருக்கிறார். அதே நிலைதான் உங்கள் ஆக்ரோஷத்துக்கும் ஏற்படும் பும்ரா. கிரிக்கெட்டை ஆடுங்கள், அதன் ஆட்ட உணர்வுடனும் நட்புணர்வுடனும் ஆடுங்கள் அதுதான்நல்லது, இந்த முரண், சண்டை உத்தியெல்லாம் காலாவதியாகி விட்டது.

  எல்லோரும் கொண்டாடும் வெற்றியாளராக மாறுங்கள் பும்ரா, பலர் வெறுப்புக்கு ஆளாகும் வெற்றியாளராகாதீர்கள்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs South Africa, Jasprit bumrah

  அடுத்த செய்தி