தினேஷ் கார்த்திக்கிற்கு முன் அக்சர் படேலை இறக்கியது சரியே- ஷ்ரேயஸ் அய்யர்
தினேஷ் கார்த்திக்கிற்கு முன் அக்சர் படேலை இறக்கியது சரியே- ஷ்ரேயஸ் அய்யர்
அய்யர்
நேற்று கட்டாக்கில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய தோல்விக்கு பல காரணங்களில் ஒரு காரணமாக, தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக பவுலர் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் இறக்கிவிட்டது பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் லெஜண்ட்கள் ரிஷப் பண்ட்டை சாடினர், ஆனால் அக்சர் படேலை முன்னால் இறக்கியது சரிதான் என்கிறார் ஷ்ரேயஸ் அய்யர்.

இஷான் கிஷன், பண்ட், ஹர்திக் பாண்டியா சடுதியில் வெளியேற இன்னும் 7 ஓவர்கள் மீதமிருக்கையில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்கை இறக்கி விடாமல் அக்சர் படேலை இறக்கினார். இது சுனில் கவாஸ்கர், கிரேம் ஸ்மித் மற்றும் கவுதம் கம்பீர் இடையே கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
ஆனால் ஷ்ரேயஸ் அய்யர் இதை நியாயப்படுத்திப் பேசுகையில், “7 ஓவர்கள் மீதமிருந்தன அக்சர் படேல் சிங்கிள்கள் எடுத்து ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யக்கூடியவர் என்பதால் அவர் இறக்கப்பட்டார். அந்த சமயத்தில் முதல் பந்திலிருந்தே பவுண்டரிக்கள், சிக்சர்கள் விளாசும் வீரர் அங்கு இறக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் தினேஷ் கார்த்திக் இறக்கப்படவில்லை.
தினேஷ் கார்த்திக்கும் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து பிறகு அடிப்பார், மறுக்கவில்லை. 15 ஓவர்களுக்குப் பிறகு தினேஷ் கார்த்திக் ஒரு சொத்து. அவர் அங்கு இறங்கியவுடன் பந்துகளை ஸ்லாக் செய்வார். ஆனால் அவரே கூட நேற்று ஆரம்பத்தில் ஆடுவதை கடினமாகவே உணர்ந்தார்.
நான் 35 பந்தில் 40 எடுத்தேன், ஆனால் அங்கு மிகக் கடினமாக இருந்தது. பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை கணிக்க முடியவில்லை. நான் பந்தை டைம் செய்யவும் விரும்பினேன். நான் அனைத்தையும் அங்கு முயன்றேன் ஆனால் அப்பவும் கடினமாகவே இருந்தது. குறிப்பாக புதிய பேட்ஸ்மென்கள் வந்து அடித்து ஆடுவது கடினம்.
பிட்சை கணிக்க வேண்டும், ஸ்கோரும் செய்ய வேண்டும். 160 ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் அவர்களை பிரஷர் போட்டிருக்கலாம்” என்றார்.
இவரது வாதம் நகைச்சுவையாக உள்ளது, டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வாரா அல்லது அடித்து ஆடும் அக்சர் படேல் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வாரா?
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.