Home /News /sports /

2வது ஒருநாள் போட்டியில் வெற்றி... இந்தியாவுக்கு எதிரான தொடரையும் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

2வது ஒருநாள் போட்டியில் வெற்றி... இந்தியாவுக்கு எதிரான தொடரையும் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது. ஞாயிறன்று கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுன் நகரில் நடைபெறுகிறது.

    பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்திருந்தது.

    இதையடுத்து, ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த புதன் அன்று தொடங்கியது. இதில், தென்னாப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் இன்று 2வது ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு வாழ்வா சாவா என்ற கட்டத்தில் நடைபெற்றது.

    முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 71 பந்துகளை சந்தித்து 85 ரன்ளை குவித்தார்.

    கேப்டன் ராகுல் 55 ரன்களும், ஷர்துல் தாகூர் ஆட்டமிழக்காமல் 40 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில், ஷம்சி 2 விக்கெட்டுகளையும், மகாலா, மார்க்ரம், மகராஜ், பெலுக்வயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் மலான், குவின்டன் டி காக் ஆகியோர் களம் இறங்கினர். பொறுப்புடனும், அதிரடியாகவும் விளையாடிய இருவரும் எளிதாக ரன் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர உதவினர். முதல் விக்கெட்டுக்கு மட்டும் இவர்கள் 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தினர். 78 ரன்கள் எடுத்திருந்தபோது குவின்டன் டி காக்கும், 91 ரன்களில் மலானும் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் டெம்பா பவுமா 35 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த மர்க்ராம், வாண்டர் டசன் இணை, சிறப்பாக விளையாடி அணியை 48.1 ஓவரில் வெற்றி பெற வைத்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது. ஞாயிறன்று கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுன் நகரில் நடைபெறுகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Cricket

    அடுத்த செய்தி