Home /News /sports /

India vs South Africa 3rd day: கடினமான பந்து வீச்சில் ரிஷப் பண்ட் சபாஷ் அரைசதம், கோலி இமாலயப் பொறுமை- இந்தியா “மகிழ்ச்சி”

India vs South Africa 3rd day: கடினமான பந்து வீச்சில் ரிஷப் பண்ட் சபாஷ் அரைசதம், கோலி இமாலயப் பொறுமை- இந்தியா “மகிழ்ச்சி”

rishab pant, virat kohli

rishab pant, virat kohli

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று இந்திய அணி உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி இமாலயப் பொறுமையுடன் ஆடி 127 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து 4 பவுண்டரிகளுடன் ஆடி வருகிறார். ரிஷப் பண்ட் 4 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் என்று 60 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நிற்கிறார்.

    இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்காக 72 ரன்களைச் சேர்த்தனர்.

    இந்தியா 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, இன்று தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. நேற்று எப்படி பும்ரா 2வது பந்திலேயே மார்க்ரமை காலி செய்தாரோ அதை இன்று யான்சென் ரிபீட் செய்தார். யான்சென் ஒரு பந்தை லெக் ஸ்டம்பில் குத்தி ஏத்த பவுன்சினால் புஜாரா முடங்கினார். புஜாரா உள்ளுக்குள் நின்ற படி அதை தடுத்தாட முயன்றார். ஆனால் பவுன்ஸ் அதிகமாக இருந்ததால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை லெக் ஸ்லிப்பில் கீகன் பீட்டர்சன் டைவ் அடித்துக் கேட்ச் எடுக்க புஜாரா 9 ரன்களில் வெளியேறினார்.

    அதற்கு அடுத்த ரபாடா ஓவரிலேயே ரகானே 1 ரன் எடுத்து இந்த முறை ஆஃப் ஸ்டம்பில் குத்தி எழுப்பப்பட்ட பந்துக்கு இவரும் எம்பி கிளவ்வைக் கொடுத்தார், பந்து கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனது. முதலில் விக்கெட் கீப்பருக்கும் பந்து எழும்பியது, அவர் கிளவ்வில் பட்டு எல்கரிடம் கேட்ச் ஆனது, எல்கரின் கவனம் அபாரம். பந்து லெந்த்திலிருந்து கண்டபடி எகிறியதால் ரகானேவை ஒரே தூக்கு தூக்கி விட்டது பந்து, அவுட் ஆனார். இந்தியா 58/4.

    இவர்கள் ஆட்டமிழக்க யான்சென் கோலிக்கு ஏத்து ஏத்தென்று தொண்டைக்குழிக்கு ஏத்தினார், இருமுறை பந்து மட்டையில் பட்டு ஆளில்லா இடத்தில் அருகில் விழுந்தது, அங்கு ஆளிருந்தால் கோலி பெவிலியனுக்கு திரும்பியிருப்பார். ஆனால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அடிக்கற மாதிரி போட்டாக்கூட தொட மாட்டேண்டா, பாத்துரலாண்டா என்று அவர் இமாலய பொறுமை கடைப்பிடித்து ஆடிவருகிறார்.

    ரிஷப் பண்ட் மாறாக ரபாடா ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் பவுண்டரி அடித்தார். பிறகு லுங்கி இங்கிடியை அருமையாக ஒரு கவர் டிரைவ் பவுண்டரி அடித்தார். முதல் சேஞ்ச் டுவேன் ஆலிவர் வந்தார், அவரை மேலேறி வந்து ஸ்பின்னரை ஆடுவது போல் கவர் பவுண்டரிக்கு பந்தை அலற விட்டார். மகராஜ் வந்தவுடன் லெக் திசையில் ஒரு பந்தை தவறாகப் போட கோலி ஒரு பவுண்டரி அடித்தார், இதுதான் கோலியின் ஒரே பவுண்டரி.

    பிறகு மகராஜை இறங்கி வந்து ரிஷப் பண்ட் லாங் ஆன் மேல் சிக்ஸ் அடித்தார். கடைசியில் யான்சென் போட்ட லோ புல்டாஸை திருப்பி விட்டு 2 ரன்கள் ஓடி அரைசதம் எடுத்தார், கோலி அவர் தோள்களில் ஒரு கையை மாலையாகச் சுற்றிப் போட்டார். அருமையான இன்னிங்ஸ். இந்தியா 130/4. ரிஷப் பண்ட் 51 நாட் அவுட், கோலி 127 பந்துகளில் 29 நாட் அவுட், லீட் 143/4. உணவு இடைவேளைக்குப்பிறகு என்ன நடக்கிறது என்பதே சுவாரசியம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli, India vs South Africa, Rishabh pant

    அடுத்த செய்தி