ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs SA| இந்தியா அபார வெற்றி: செஞ்சூரியன் கோட்டையைத் தகர்த்து வரலாறு படைத்த கோலி படை

Ind vs SA| இந்தியா அபார வெற்றி: செஞ்சூரியன் கோட்டையைத் தகர்த்து வரலாறு படைத்த கோலி படை

செஞ்சூரியன் கோட்டையை தகர்த்த கோலி படை, இந்தியா 1-0

செஞ்சூரியன் கோட்டையை தகர்த்த கோலி படை, இந்தியா 1-0

2021 தொடக்கத்தில் பிரிஸ்பன் ஆஸ்திரேலிய கோட்டையை தகர்த்த இந்திய அணி வருட முடிவில் தென் ஆப்பிரிக்கவின் செஞ்சூரியன் கோட்டையைத் தகர்த்தது. 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 4ம் நாள் ஆட்ட முடிவில் 94/4 என்று இருந்த தென் ஆப்பிரிக்கா அணி இன்று 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா தரப்பில் பும்ரா, ஷமி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சிராஜ், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

2021 தொடக்கத்தில் பிரிஸ்பன் ஆஸ்திரேலிய கோட்டையை தகர்த்த இந்திய அணி வருட முடிவில் தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியன் கோட்டையைத் தகர்த்தது. 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 4ம் நாள் ஆட்ட முடிவில் 94/4 என்று இருந்த தென் ஆப்பிரிக்கா அணி இன்று 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

மழை வரும்வதற்கு முன்னாலேயே செஞ்சூரியன் கோட்டையை தகர்த்தது. நேற்று ராசி வான் டெர் டியூசனையும் கடைசி பந்தில் மகராஜையும் குச்சியைப் பெயர்த்த பும்ரா இன்று மிக முக்கியமான விக்கெட்டான டீன் எல்கரை பெவிலியன் அனுப்பினார்.

இதற்கு முன்னால் 1992 முதல் இந்தியா தென் ஆப்பிரிக்கா வந்து சென்சூரியனில் ஆடியுள்ளது, ஆனால் அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், தோனி, ராகுல் திராவிட், என்று யாரும் தகர்க்க முடியாத சென்சூரியன் கோட்டையை கோலி படை தகர்த்தது.

இன்று பவுண்டரிகளாக விளாசி வந்த டீன் எல்கருக்கு பும்ரா ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து ஒரு பந்தை உள்ளே கொண்டு வர எல்கர் எம்பி அதை பிளிக் செய்ய முயன்றார், ஏற்கெனவே மிடில் அண்ட் ஆஃபில் அவர் நகர்ந்து ஆடியதால் ஸ்டம்புக்கு நேராக வாங்கினார். நல்ல வேளையாக ஷமி எல்கருக்கு விட்ட எளிதான கேட்ச் பெரிய அளவில் பாதிக்கவில்லை.

கடைசியில் எல்கர் போனவுடனேயே வரிசையாக அனைவரும் ஆட்டமிழந்தனர், குவிண்டன் டி காக் மிக அருமையாக பும்ராவை 2 பவுண்டரிகள் விளாசி 21 ரன்கள் எடுத்து ஆடிவந்த போது முதல் இன்னிங்ஸில் தேவையில்லாமல் ஷர்துல் தாக்கூர் பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொண்டது போல் ஷமி பந்தை கட் செய்கிறேன் பேர் வழி என்று அவர் கால்கள் எங்குமே இல்லை பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார்.

வியான் முல்டருக்கு முகமது ஷமி மிக அருமையாக ஒரு பந்தை காற்றில் உள்ளே கொண்டு வந்து சற்றே வெளியே எடுத்தார் எட்ஜ் ஆகி பந்த் கையில் போய் உட்கார்ந்தது. மார்க்கோ யான்சென் 13 ரன்களில் ஷமி வீசிய அதேபோன்ற உள்ளே வந்து சற்றே வெளியே எடுக்க எட்ஜ் ஆகி பண்ட்டிடம் கேட்ச் ஆகி நடையைக்கட்டினார்.

கேகிசோ ரபாடா அஸ்வின் பந்தை ட்ரைவ் ஆடப்போய் பாயிண்டில் ஷமியிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். அடுத்த பந்தே அஸ்வின் லுங்கி இங்கிடியையும் காலி செய்ய தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியன் கோட்டை தகர்க்கப்பட்டது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் 12 இந்தியாவுக்குக் கிடைத்தது

First published:

Tags: Captain Virat Kohli, India vs South Africa, Jasprit bumrah