Home /News /sports /

ஏய்! அரைகுறை! வாயை மூடு- ரிஷப் பண்ட் ஆவேசம்- வைரல் வீடியோ

ஏய்! அரைகுறை! வாயை மூடு- ரிஷப் பண்ட் ஆவேசம்- வைரல் வீடியோ

ரிஷப் பண்ட், இந்தியா-தென் ஆப்பிரிக்கா 2வது டெஸ்ட் 3ம் நாள்

ரிஷப் பண்ட், இந்தியா-தென் ஆப்பிரிக்கா 2வது டெஸ்ட் 3ம் நாள்

கோலி-ரவிசாஸ்திரி கூட்டணி உருவாக்கிய ஒரு கலாச்சாரம் எதிரணியினரிடம் சண்டையிடுவது, அதன்படி பேட்டிங்கில் ஒன்றையும் ஆட முடியாத சின்னப்பையன் ரிஷப் பண்ட் நேற்று தென் ஆப்பிரிக்கா வீரரிடம் சண்டையிட்டார்.

    கோலி-ரவிசாஸ்திரி கூட்டணி உருவாக்கிய ஒரு கலாச்சாரம் எதிரணியினரிடம் சண்டையிடுவது, அதன்படி பேட்டிங்கில் ஒன்றையும் ஆட முடியாத சின்னப்பையன் ரிஷப் பண்ட் நேற்று தென் ஆப்பிரிக்கா வீரரிடம் சண்டையிட்டார்.

    பேட்டிங்கில் ஒன்றும் செய்ய முடியவில்லை, ரபாடா உஷ்ணத்துடன் பொறிபறக்க வீசிக் கொண்டிருக்கிறார், இவர் இறங்கியவுடன் வான் டெர் டியூசன் ஏதோ சொல்ல ரிஷப் பண்ட், ‘டேய்! அரைகுறை உன் வாயை மூடு’ என்று கூறியது ஸ்டம்ப் மைக்கில் எடுத்து விட்டது: வைரல் வீடியோ இதோ:



    2ம் நாள் ஆட்டத்தில் வான் டெர் டியூசனுக்கு ஏற்கெனவே ஒருமுறை தரையில் பட்டு கேட்ச் எடுத்துவிட்டு ஏதோ பெரிய கேட்சைப்பிடித்தது போல் ஆட்டம்போட்டார் ரிஷப் பண்ட், கடைசியில் வான் டெர் டியூசன், ஷர்துல் தாக்குர் பந்தை எட்ஜ் செய்ய அதையும் தரையில் பட்டுத்தான் பிடித்தார் நம் வீர தீர ‘பாசிட்டிவ்’ ரிஷப் பண்ட், ஆனால் நடுவர் அவுட் கொடுக்க டியூசன் பேசாமல் மவுனியாக வெளியேறினார்.

    இந்த முறை ரிஷப் பண்ட் இறங்கிய போது ஷார்ட் லெக்கில் நின்று கொண்டிருந்த வான் டெர் டியூசன் ரிஷப் பண்ட்டின் தரைக்கேட்சை குறிப்பிட்டு ஏதோ சொல்ல கடுப்பான ரிஷப் பண்ட், ‘டேய் அரைகுறை உன் வாயை மூடு’ என்று பதிலடி கொடுத்தார்.

    ஆனால் பதிலடி பேட்டிலிருந்து வரவேண்டும் என்பதை பண்ட் மறந்தார், அடுத்த பந்தே ரபாடா வீசிய ஒன்று சின்னப்பையன் ரிஷப் பண்ட் விரல், ஹெல்மெட் கம்பியை பதம் பார்த்தது. அப்போதும் வான் டெர் டியூசன் ஏதோ சொன்னார். இதில் கவனம் இழந்த ரிஷப் பண்ட் அடுத்த பந்தே ஏதோ ரபாடா நெட் பவுலர் போல் மேலேறி வந்து ஒரு சுத்து சுத்தினார், பந்து மட்டையின் விளிம்பில் பட்டு வெரைனிடம் கேட்ச் ஆனது, 3 பந்தில் டக் அவுட் ஆனார் ரிஷப் பண்ட்.

    Also Read: கோலி ஸ்டைலில் சண்டைக்கோழி ஆகாதீங்க பும்ரா, பவுலிங்கில் கவனம் செலுத்துங்க

    தேவையில்லாமல் வாய் வார்த்தையைப் பயன்படுத்தி கவனத்தை இழந்து இப்படி ஆட்டமிழந்தார் பண்ட், இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, Rishabh pant

    அடுத்த செய்தி