ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென் ஆப்பிரிக்காவை 1 மணி நேரத்துக்குள்ள காலி செய்யணும்-இல்லேன்னா எஸ்கேப்தான்!

தென் ஆப்பிரிக்காவை 1 மணி நேரத்துக்குள்ள காலி செய்யணும்-இல்லேன்னா எஸ்கேப்தான்!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் 5ம் நாள் ஆட்டம் மழை வருமா?

இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் 5ம் நாள் ஆட்டம் மழை வருமா?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு படைப்பதற்கு தடையாக இருப்பது தென் ஆப்பிரிக்கா பேட்டிங் அல்ல, இன்றைய மழை அச்சுறுத்தல் வானிலை எச்சரிக்கைதான்.

ஏற்றமும் தாழ்வுமாக இருக்கும் இந்தப் பிட்சில் தென் ஆப்பிரிக்கா வெற்றி இலக்கான 305 ரன்களை எட்டுவது மிகமிகக் கடினம். மேலும் அந்த அணி நேற்று 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை எடுத்துள்ளது, அந்த அணியின் கேப்டனும் சுவருமான டீன் எல்கர் 52 ரன்களில் இருக்கிறார். இந்நிலையில் இன்று மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்புகள் கூறுகின்றன.

ஏற்கெனவே 2ம் நாள் ஆட்டம் முற்றிலும் ஆட முடியாமல் போனது. இன்றைய வானிலை கணிப்பில் உணவு இடைவேளை வரை பகுதியளவு மேக மூட்டம் இருந்தாலும் மழை பெய்யாது என்றும், உணவு இடைவேளைக்குப் பிறகு மழை பெய்யும் வாய்ப்பு 65% இருப்பதாகவும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாலையில் மழை வாய்ப்பு 33% இருக்கிறது.

பிரச்சனை அதுவல்ல கொஞ்சம் மழை பெய்தாலும் அதாவது அரை மணி மழை பெய்தாலும் ஆட்டம் தொடங்க ஒன்றரை மணி நேரம் ஆகலாம். அதுதான் பிரச்சனை அங்கெல்லாம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் உள்ளது போல் சூப்பர் சாப்பர் கிடையாது.

வானிலை முன்னறிவிப்பு சரியாக இருந்தால் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 5ம் நாளான இன்று ஒரு மணி நேரத்தில் துவைத்துக் காயப்போட வேண்டும், இல்லையெனில் மழை வந்து ஆட்டத்தை கெடுத்து டிரா ஆகிவிடும்.

தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை லஞ்ச் வரை ஒன்றிரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஓட்டி விட்டால் உணவு இடைவேளைக்குப் பிறகு மழை வந்து டிரா வாய்ப்பு கைகூடும்.

எனவே இந்த டெஸ்ட்டில் 2 ரிசல்ட்களே சாத்தியம் ஒன்று டிரா, இன்னொன்று இந்திய வெற்றி, தென் ஆப்பிரிக்கா வெற்றி கனவில்தான் நிறைவேறும், இந்தப் பிட்சில் ஆட முடியாது என்பதுதான் நிதர்சனம், கிரிக்கெட் ஒரு நிச்சயமின்மைகளின் அபார ஆட்டம் என்ற பழமொழி இந்தப் பிட்சில் செல்லுபடியாகாது, ஒரே ஒரு நிச்சயமின்மைதான் இன்று உள்ளது, அது மழை.

தென் ஆப்பிரிக்கா மழைக்காக பிரார்த்தனை செய்யும் போது கோலி படை மழை வேண்டாம் என்றே பிரார்த்தனை செய்யும்.

இதையும் படிங்க: முடிந்து விட்டார் விராட் கோலி?- பூம் பூம் பும்ராவின் பாதம் பெயர்க்கும் யார்க்கர்; எல்கர் எனும் சுவர்

ஒரு முறை இந்திய அணி மே.இ.தீவுகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் அரை மணி நேரம் தாக்குப் பிடித்திருந்தால் கடைசி நாளில் டிரா ஆகியிருக்கும் ஆனால் அரை மணி நேரம் கூட தாங்காமல் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தோற்றது, அதன் பிறகு அந்த ஊரில் 4 நாட்களுக்கு மழை பெய்த சம்பவமும் நடந்தது.

First published:

Tags: First test cricket match, India vs South Africa