Home /News /sports /

பாண்டிங்குக்கு அப்புறம் கோலிதான்; ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்குப் பிறகு நாமதான், - செஞ்சூரியன் சுவாரசியங்கள்

பாண்டிங்குக்கு அப்புறம் கோலிதான்; ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்குப் பிறகு நாமதான், - செஞ்சூரியன் சுவாரசியங்கள்

virat kohli

virat kohli

செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்குப் பிறகு இந்திய அணி 3வதாக இங்கு வெற்றி பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்குப் பிறகு இந்திய அணி 3வதாக இங்கு வெற்றி பெற்றுள்ளது.

    மேலும், 2010ம் ஆண்டுக்குப்பின் (2016ம் ஆண்டு தவிர) இந்திய அணிக்கு சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிகபட்சமாக வெற்றிகளை இந்திய அணி 2021ம் ஆண்டில் பெற்றுள்ளது. இதுவரை இந்த ஆண்டில் மட்டும் இந்திய அணி 8 வெற்றிகளைப் பெற்றது, இதில் 4 வெற்றிகள் ஆசியாவுக்கு வெளியே கிடைத்ததாகும். 2021ம் ஆண்டு தொடக்கத்தில் பிரிஸ்பன் ஆஸ்திரேலியா கோட்டையைத் தகர்த்த இந்திய அணி 2021 ஆம் ஆண்டு முடிவில் தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியன் கோட்டைக்குள் புகுந்து கைப்பற்றியது.

    இந்த டெஸ்ட் குறித்த புள்ளி விவரங்களை மேலும் காண்போம்:

    உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தென் ஆப்பிரி்க்க அணி 200 ரன்களுக்கு கீழ் 3 முறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளது. 2002-ல் ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திேரலியாவுக்கு எதிராகவும், 2018ல் ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியாவுக்கு எதிராகவும் ஆட்டமிழந்தது. செஞ்சூரியன் மைதானத்தில் இதுவரை 200 ரன்களுக்கு குறைவான ஸ்கோரில் தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது இல்லை.முதல்முறையாக ஆட்டமிழந்துள்ளது.

    தென் ஆப்பிரி்க்க அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமையை ஆஸி.முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் கேப்டன் விராட் கோலியும் பகிர்ந்து கொண்டார். இருவரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 8 வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

    செஞ்சூரியனில் இந்திய அணியின் பந்துவீச்சு சராசரி 19.10 சராசரியாகும். மிகக்குறைந்த சராசரியில் இந்திய பந்துவீச்சாளர்கள் இதுவரை 6 முறை மட்டும்தான் வெளிநாடுகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்தப் போட்டியில் 783 பந்துகள் வீசப்பட்டன.

    இந்த ஆண்டில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெறும் 8-வது வெற்றி இதுவாகும். காலண்டர் ஆண்டில் 2-வது அதிகபட்ச வெற்றி யாகும். இதற்குமுன் 2016ல் 9 வெற்றிகளை இந்திய அணி அதிகபட்சமாகப் பெற்றிருந்தது. கடைசியாக 2010ம் ஆண்டில் 8 வெற்றிகளை இந்திய அணி பெற்றது அதன்பின் இந்த ஆண்டுதான் 8 வெற்றிகளைப்பெறுகிறது. இதில் 4 வெற்றிகள் ஆசியாவுக்கு வெளியே கிைடத்த வெற்றியாகும்.

    ஒரு காலண்டர் ஆண்டில் எதிரணியை இந்திய அணி 200 ரன்களுக்குள் சுருட்டியது இது 12வது முறையாகும். கடந்த 1978-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி 200 ரன்களுக்குள் எதிரணியை 13 முறை சுருட்டியிருந்து.

    செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட்பார்க் மைதானத்தில் இதுவரை தென் ஆப்பிரிக்க அணி 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 3-வது தோல்வியைச் சந்தித்துள்ளது. இதற்கு முன் 2000ம் ஆண்டில் இங்கிலாந்திடமும், 2014ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிடமும் தென் ஆப்பிரிக்க அணி தோற்றது.

    மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் முகமட் ஷமி 200 விக்கெட்டுகள் மைல் கல்லை தன் 55வது டெஸ்ட் போட்டியில் கடந்து, கபில்தேவ், இஷாந்த் சர்மா, ஜவகல் ஸ்ரீநாத், ஜாகீர் கான் ஆகியோருக்கு அடுத்த வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்கிறார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli, India vs South Africa

    அடுத்த செய்தி