Home /News /sports /

லுங்கி இங்கிடி 6 விக்கெட்- இந்தியா 327 ரன்களுக்கு அதிர்ச்சி ஆல் அவுட்

லுங்கி இங்கிடி 6 விக்கெட்- இந்தியா 327 ரன்களுக்கு அதிர்ச்சி ஆல் அவுட்

லுங்கி இங்கிடி 6 விக்கெட்.

லுங்கி இங்கிடி 6 விக்கெட்.

செஞ்சூரியனில் நடைபெறும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று இந்திய விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தது. இந்திய அணி -327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    செஞ்சூரியனில் நடைபெறும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று இந்திய விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தது. இந்திய அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    2ம் நாள் ஆட்டம் முழுதும் மழையால் வாஷ் அவுட் ஆக, இன்று இந்திய அணி 272/3 என்று தொடங்கியது. ராகுல் தன் 122 ரன்களுடன் 1 கூடுதலாகச் சேர்த்து 123 என்று இருந்த போது ரபாடாவின் நெஞ்சுயர லெக் திசை ஷார்ட் பிட்ச் பவுன்சரை ராகுல் ஹூக் ஆடினார், ஆனால் இது சும்மா ஹூக் ஆனது. பந்து மட்டையின் உள்விளிம்பு கிளவ் என்று பட்டு டி காக்கிடம் கேட்ச் ஆனது. 278/4.

    அஜிங்கிய ரகானே ஒரு பவுண்டரி அடித்து 48 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிடியின் பந்து பேக் ஆஃப் லெந்திலிருந்து ஒரு பந்து கூடுதலாக எழும்ப வெளியே சென்ற பந்தை ஆட முயன்று எட்ஜ் ஆனது டிகாக்கிற்கு எளிதான கேட்ச்.

    அடுத்ததாக அஸ்வின் இறங்கி ஒரு பவுண்டரி அடித்தார், இவர் ரபாடா வீசிய மிடில் அண்ட் லெக் திசை வந்த பந்தை முன்னமேயே பேட்டை மடக்கி லெக் திசையில் ஆட பந்து முன் விளிம்பில் பட்டு ஷார்ட் கவரில் கேசவ் மகராஜ் கையில் கேட்ச் ஆனது இந்தியா 296/6. அதிகம் எதிர்பார்த்த ரிஷ பண்ட் 8 ரன்களில் இங்கிடியின் இன்ஸ்விங்கர் பந்து ஒன்று லெக் அண்ட் மிடிலில் எழும்ப ஆட முயன்று இன்சைடு எட்ஜ் ஆகி ஷார்ட் லெக்கில் இதற்கென்றே நிறுத்தப்பட்ட வான் டெர் டியூசன் கையில் போய் விழுந்தது. 296/7.

    அடுத்ததாக ஷர்துல் தாக்கூரும் ஒரு பவுண்டரி மூலம் 4 ரன்கள் எடுத்து ரபாடாவின் வைடு பந்தை துரத்தி பின்னால் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்தியா 304/8. லுங்கி இங்கிடி 64 ரன்களுக்கு 6 விக்கெட். கேகிசோ ரபாடா 71 ரன்களுக்கு 3 விக்கெட். கடைசியில் ஜஸ்பிரித் பும்ரா 14 ரன்கள் எடுத்து அறிமுக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜேன்சனிடம் ஆட்டமிழந்தார். இது டெஸ்ட்டில் இவரது முதல் விக்கெட்.

    இதையும் படிங்க: ஜேசன் கில்லஸ்பிக்குப் பிறகு டெஸ்ட் ஆடும் ஆஸ்திரேலிய பூர்வக்குடி வீரர்- யார் இந்த ஸ்காட் போலண்ட்?

    272/3 என்று தொடங்கிய இந்திய அணீ 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை அதிர்ச்சிகரமாக இழந்து 327 ரன்களுக்குச் சுருண்டது. சிராஜ் 4 நாட் அவுட். இந்திய அணி மொத்தம் 105.3 ஓவர்கள் தாங்கியது. இன்று 15 ஓவர்கள்தான் தாங்கியது 55 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa

    அடுத்த செய்தி