Home /News /sports /

India vs South Africa: ராகுல், தாக்கூர் அவுட், இந்தியா ரன் எடுக்கத் திணறல்

India vs South Africa: ராகுல், தாக்கூர் அவுட், இந்தியா ரன் எடுக்கத் திணறல்

ராகுலை வீழ்த்திய லுங்கி இங்கிடி, இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்.

ராகுலை வீழ்த்திய லுங்கி இங்கிடி, இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்.

செஞ்சூரியனில் நடைபெறும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இந்திய அணி உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.

    செஞ்சூரியனில் நடைபெறும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இந்திய அணி உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.

    இதன் மூலம் 209 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இன்னும் 170 ஓவர்கள் மீதமுள்ளன. அதில் எத்தனை ஓவர்கள் இந்திய அணி பேட் செய்யும் என்பது கோலி செய்யும் முடிவைப்பொறுத்தது. 209 ரன்கள் முன்னிலை என்றால், இன்னும் 50-60 ஓவர்கள் பேட் செய்து மேலும் 180 ரன்களை எடுத்தால் போதும் 389-400 ரன்களை வைத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஒரு 110 ஒவர்களை கையில் கொடுத்தால் ஆல் அவுட் செய்ய முடியும்.

    இந்நிலையில் 4ம் நாள் ஆட்ட உணவு இடைவேளை வரையிலான ஆட்டத்தில் இந்திய அணி 63 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளான ராகுல், தாக்கூர் விக்கெட்டுகளை இழந்துள்ளது. பிட்ச்சில் பேட் செய்வது கடினம், ஏனெனில் பந்துகள் உயரமாகவும் பிறகு தாழ்வாகவும், எதிர்பாரா லெந்திலிருந்து எழும்புவதும், தாழ்வதுமாக உள்ளது.

    புஜாரா அம்பயர்ஸ் கால் மூலம் தப்பித்தார், ஆனால் மற்றபடி 52 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 12 நாட் அவுட், விராட் கோலியும் ரபாடாவின் ஆஃப் கட்டரில் ஒரு எல்.பி. வாங்கினார், அதுவும் அம்பயர்ஸ் கால் நாட் அவுட்டில் தப்பிய தீர்ப்பாகும், கோலிக்கும் அதிர்ஷ்டம் விளையாடுகிறது. கோலி 4 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார்.

    இன்று முன்னதாக ஷர்துல் தாக்கூர், ரபாடா வீசிய எகிறு பந்தை அப்பர் கட் செய்து சிக்சருக்கு பாயிண்ட் மேல் தூக்கினார், இதே கிரவுண்டில்தான் 2003 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் சேவாகும் சச்சினும், ஷோயப் அக்தர், வக்கார் யூனிசை அப்பர் கட்களாக ஆடி பவுண்டரிகளை குவித்தனர், அந்த நினைவு ஷர்துல் அடித்த சிக்சரின் போது ஏற்பட்டது.

    அதே ரபாடாவிடம்தான் ஷர்துல் தாக்கூர் 10 ரன்களில் ஸ்கொயர் ஆகி எட்ஜ் ஆகினார். முல்ட கேட்ச் எடுத்தார். லுங்கி இங்கிடி பந்தில் கே.எல்.ராகுல் 23 ரன்களில் வெளியேறினார். இவர் ஆட்டமிழப்பதற்கு முன்புதான் அதே ஓவரில் கையில் அடி வாங்கினார். இன்னொரு பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சற்றே எகிற ஆடாமல் விட வேண்டிய பந்தை தொட்டார் கெட்டார். அந்த கையில் வாங்கிய அடி அவரது கவனத்தை சிதறடித்திருக்கலாம். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்க்கோ யான்சென், ரபாடா, இங்கிடி தலா ஒரு விக்கெட்.

    இதையும் படிங்க: India vs South Afrida 1st test day 4: இந்தியா ஆல் அவுட் ஆகிவிடும்- முன்னாள் ஓப்பனர் திட்டவட்டம்

    ஆக இந்த 2 விக்கெட்டுகள் தவிர வேறு சேதம் இல்லை இந்தியா 79/3, புஜாரா 12, கோலி 18, இந்தியா 79/3 மொத்த லீட் 209 ரன்கள்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa

    அடுத்த செய்தி