Home /News /sports /

India vs South Afrida 1st test day 4: இந்தியா ஆல் அவுட் ஆகிவிடும்- முன்னாள் ஓப்பனர் திட்டவட்டம்

India vs South Afrida 1st test day 4: இந்தியா ஆல் அவுட் ஆகிவிடும்- முன்னாள் ஓப்பனர் திட்டவட்டம்

இந்திய அணி இன்று ஆல் அவுட் ஆகும் என்கிறார் ஆகாஷ் சோப்ரா

இந்திய அணி இன்று ஆல் அவுட் ஆகும் என்கிறார் ஆகாஷ் சோப்ரா

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இந்திய அணி 146 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கவுள்ளது, மயங்க் அகர்வால் ஆட்டமிழக்க இந்திய அணி 16/1 என்று தொடங்கவுள்ளது, இந்நிலையில் டிக்ளேர் எல்லாம் கிடையாது இந்தியா ஆல் அவுட் ஆகிவிடும் என்று முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    இந்திய அணி நேற்று 272/3-லிருந்து 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்களுக்கு மடிய தென் ஆப்பிரிக்கா அணி ஷமியின் அபார பவுலிங்கில் 197 ரன்களுக்கு காலியானது, மீண்டும் இந்தியா 16/1. ஷர்துல் தாக்கூர், ராகுல் கிரீசில் இருக்கின்றனர். இப்படியாக நேற்று 18 விக்கெட்டுகள் ஒரே நாளில் விழுந்தன. பிட்சினால் அல்ல, இரு அணிகளுமே பேட்டிங் சொதப்பலாக ஆடியதால்தான்.

    இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா தன் யூடியூப் சேனலில் கூறியதாவது, “நான் இந்தியா ஆல் அவுட் ஆகிவிடும் என்று கருதுகிறேன். மேட்ச் வெகுவேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது, 4ம் நாளான இன்று இந்தியா ஆல் அவுட் ஆகிவிடும்.

    50 அல்லது அதற்கும் கூடுதலாக 2 பார்ட்னர்ஷிப்புகள் இருக்கும். புதிய பந்தில் விக்கெட்டுகள் மளமளவென சரியும். ஏற்கெனவே மயங்க் அகர்வால் வெளியேறிவிட்டார். இருப்பினும் இன்னும் இரண்டு 50+ ரன்கள் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறது.

    ரபாடா இன்று 3-4 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார். 4 நோ-பால்களையும் அவர் போடுவார், ஆனால் 4 விக்கெட்டுகள் அல்லது அதற்கு மேலும் கூட அவர் எடுக்க வாய்ப்பிருக்கிறது. இன்றைய நாள் முடியும் போது தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட்டை இழந்திருக்கும். இந்திய அணி ரன்களை விரைவு கதியில் குவிக்கவே பார்க்கும்” என்றார் ஆகாஷ் சோப்ரா.

    நாளை 5ம் நாள் மழை நிச்சயமாக வரும் என்று வானிலை எச்சரிக்கை கூறுவதால் நிச்சயம் இன்று டிக்ளேர் முன்னமேயே இருக்கும். கடந்த தொடரில் 241 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து தென் ஆப்பிரிக்கா 124/1 என்ற நிலையிலிருந்து ஷமியின் அபார பவுலிங்கை ஆட முடியாமல் 177 ரன்களுக்கு மடிந்து தோல்வி தழுவியது, இத்தனைக்கும் அந்த அணியில் டுபிளெசிஸ், டிவில்லியர்ஸ், எல்கர், டி காக், எல்லோரும் இருந்தனர். ஆனாலும் இந்திய வெற்றியை தடுக்க முடியவில்லை.53 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோற்றது.

    அந்த அணிக்கே இந்த கதி என்றால் இந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு பெரிய இலக்கையெல்லாம் நிர்ணயிக்க வேண்டிய தேவையிருக்காது. எனவே விரைவில் டிக்ளேர் செய்து அந்த அணியின் 5-6 விக்கெட்டுகளை இன்றே கழற்றத்தான் கோலி முடிவெடுப்பார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa

    அடுத்த செய்தி