Home /News /sports /

முதல் டெஸ்ட் 5ம் நாள்: எல்கருக்கு ஈசி கேட்சை விட்ட ஷமி, வெற்றிக் கதவுகளை திறந்த பும்ரா

முதல் டெஸ்ட் 5ம் நாள்: எல்கருக்கு ஈசி கேட்சை விட்ட ஷமி, வெற்றிக் கதவுகளை திறந்த பும்ரா

ஷமி கேட்சை விட்ட பிறகு பும்ராவிடம் எல்.பி ஆகி வெளியேறிய டீன் எல்கர்.

ஷமி கேட்சை விட்ட பிறகு பும்ராவிடம் எல்.பி ஆகி வெளியேறிய டீன் எல்கர்.

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான இன்று 305 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடும் தென் ஆப்பிரிக்கா 94/4-லிருந்து மேலும் 32 ரன்களை அதிரடியாக எடுத்து 126 ரன்களுக்கு 4 விக்கெட் என்று சென்று கொண்டிருக்கிறது, மொகமட் ஷமி எல்கருக்கு தன் பவுலிங்கில்ல் கையில் வந்த கேட்சை நழுவ விட்டார். ஆனால் பும்ரா அவரை வீழ்த்தி வெற்றியின் கதவுகளைத் திறந்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    52 ரன்களுடன் இன்று காலை தொடங்கிய டீன் எல்கர் இப்போது 12 பவுண்டரிகளுடன் 77 ர்ரன்களில் எடுத்த நிலையில் பும்ரா ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வீசிய பந்தை ஷஃபுள் பண்ணி லெக் திசையில் தட்டி விடப் பார்த்தார் ஆனால் கால்காப்பில் வாங்கினார். நடுவர் கையை உயர்த்த டீன் எல்கர் மேல்முறையீடு செய்தார், அதில் பந்து ஸ்டம்பை தாக்குவது தெரிந்தது எல்கர் அவுட் ஆனதையடுத்து இந்திய வெற்றிக்கதவுகளை திறந்தார் பும்ரா.

    தென் ஆப்பிரிக்கா ஸ்கோர் 111/4 என்று இருந்தது, இதனை நெல்சன் என்று கூறுவார்கள் அந்த சமயத்தில் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக இங்கிலாந்து நடுவர் டேவிட் ஷெப்பர்ட் காலை உயர்த்தி செண்டிமெண்ட் காட்டுவார், அதே ஸ்கோரில்தான் இன்று டீன் எல்கர், ஷமி வீசிய பந்து ஒன்று சற்றே கூடுதலாக எழும்ப தடுத்தாடினார், அது ஷமியிடமே கேட்ச்சாகச் சென்றது.

    எல்கருக்கு ஷமி விட்ட ஈசி கேட்ச்

    கைகளுக்கு அழகாக வந்தது, ஆனால் சற்றும் இதனை எதிர்பார்க்காத ஷமி பந்தை தரையில் விட்டார். அனைவரும் அதிர்ச்சியடைந்தனர், ஏனெனில் கேட்சை விட்டது எல்கருக்கு அவர் 76 ரன்களில் பவுண்டரிகளாக விளாசிக் கொண்டிருந்தார். அப்படியிருக்கும் போது ஷமி கேட்சை விட்டது, மேட்சை விட்டது போல் ஆகிவிட்டது.

    ஆனால் பும்ரா ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து ஒரு பந்தை உள்ளே கொண்டு வர எல்கர் எம்பி அதை பிளிக் செய்ய முயன்றார், ஏற்கெனவே மிடில் அண்ட் ஆஃபில் அவர் நகர்ந்து ஆடியதால் ஸ்டம்புக்கு நேராக வாங்கினார். எல்கர் அவுட். தென் ஆப்பிரிக்கா இப்போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது.

    பவுமா 11 ரன்களுடனும் குவிண்டன் டி காக் ரன் எதுவும் எடுக்காமலும் கிரீசில் உள்ளனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, Jasprit bumrah

    அடுத்த செய்தி