நேற்று இந்திய ஓப்பனர் இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார், ஆனால் இதைப் பார்த்து மயங்கிட வேண்டாம் என்பதற்கான காரணம் தெம்பா பவுமாவின் கற்பனையற்ற கேப்டன்சி. ஸ்பின்னரிடம் போய் கொடுக்கலாமா? ஆனாலும் இஷான் கிஷன் நேற்று முதலில் அடித்த 3 பவுண்டரிகளும் எட்ஜ், 5 முறை பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்ததற்கே ஆட முடியாமல் பீட்டன் ஆனார். ஆனால், இவர் சொல்கிறார், ‘ரோஹித் சர்மாவையோ, கே.எல்.ராகுலையோ எனக்காக ட்ராப் செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டேன்’ என்கிறார்.
இதென்ன கலாட்டா என்கிறீர்களா, இஷான் கிஷன் அப்படித்தான் சொன்னர், “ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் நிறையச் செய்துள்ளனர். நாட்டுக்காக நிறைய ரன்கள் எடுத்துள்ளனர். அவர்களைப் போய் ட்ராப் செய்து விட்டு என்னை அணியில் எடுங்கள் என்று கேட்க மாட்டேன். எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது நான் ரன்கள் குவிப்பேன்.
தோல்விக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டுப்பிடிக்க வேண்டும். பவுலிங்கில் என்ன தவறு செய்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே ஒரு அணியாக என்ன தவறு செய்தோம் என்பதை யோசிக்க வேண்டும்.
ரோஹித்தும், ராகுலும் உலகத் தரமான வீரர்கள், அவர்கள் அணியில் இருக்கும் போது நான் எனக்கான ஆதரவைக் கோர மாட்டேன். நான் பயிற்சியில் சிறப்பாக ஆட வேண்டும், எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ரன்களை குவிக்க வேண்டும்.
நான் என்ன செய்தாலும் அது அணிக்கு எப்படி பங்களிப்பாக இருக்கும் என்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன்.” என்றார் இஷான் கிஷன்.
2வது டி20 போட்டி கட்டாக்கில் வரும் ஞாயிறன்று நடைபெறுகிறது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.