அன்று வாத்தியார் இன்று மாணவர் - தலைகீழாகிப் போன விராட் கோலி, ராகுல் கிரிக்கெட் வாழ்வு
அன்று வாத்தியார் இன்று மாணவர் - தலைகீழாகிப் போன விராட் கோலி, ராகுல் கிரிக்கெட் வாழ்வு
ராகுல் பெப் டாக்
இந்திய அணியில் நிரந்தர டெஸ்ட் கேப்டனாக ஆக்கக்கூடிய பரிசீலனையிலும் ராகுல் இருக்கிறார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் தனது தலைமைத்துவத்தால் தேர்வாளர்களை கவர முடிந்தால், டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை முழுநேர அடிப்படையில் அவருக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கோலி கேப்டனாக இருந்த போது அணி வீரர்களை களமிறங்கும் முன் குழுமித்து ஒரு உணர்வு மிக்க உத்வேகப் பேச்சு ஒன்றை பேசுவார், இப்போது மாறாக ஒருநாள் கேப்டன் கே.எல்.ராகுல் (K.L.Rahul) அத்தகைய உத்வேக பேச்சு ஒன்றை நிகழ்த்த விராட் கோலி (virat kohli) கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் நடந்த போடு இருந்த நிலைமை எப்படி மாறிப்போய் விட்டது! அன்றைய வாத்தியார் இன்றைய மாணவர், அன்றைய மாணவர் இன்றைய வாத்தியார், cricket is a great leveller என்ற வழக்குமொழி ஒன்று உண்டு, அதற்கேற்ப நாளை இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெறும் நிலையில் வலைப்பயிற்சி அமர்வில் கேஎல் ராகுல் வீரர்களிடம் பேச, கோலி கேட்டுக் கொண்டிருந்தார்.
பல ஆண்டுகளாக, கோலி தனது தலைமைத்துவ பாணியால் இந்திய கிரிக்கெட்டை வடிவமைத்ததோடு பல வளர்ந்து வரும் நட்சத்திரங்களையும் அவர் வளர்த்து விட்டார். அவர்களிடத்திலும் விட்டுக் கொடுக்காத ஒரு மனப்பான்மையையும் அவர் செல்வாக்கு செலுத்தியுள்ளார்.
இருப்பினும், ஒருநாள் போட்டித் தலைவராக கோலி வெளியேறிய பிறகு, டீம் இந்தியா தனது முதல் பயிற்சியைத் தொடங்கும் போது, சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் பேசுபொருளானது. அதில் ஒரு படத்தில், கோலி தன்னை விட ஜூனியர் கேப்டன் வார்த்தைகளை பேசா மவுனியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். மாறாக கே.எல். ராகுல் ஒரு கேப்டனின் பாத்திரத்தை நிறைவேற்றினார் மற்றும் அவரது உற்சாகமான பேச்சால் கூட்டத்தை வழிநடத்தினார்.
ரோஹித் ஷர்மா அணிக்கு கேப்டனாக இருந்திருக்க வேண்டும் என்றாலும், காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்திய அணியின் துணைக் கேப்டனாக முதலில் அறிவிக்கப்பட்ட ராகுலுக்கு இந்தத் தொடருக்கான கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பு, இந்திய அணி பயிற்சி அமர்வுக்கு புறப்பட்டது, அங்கு கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் இருவரும் வீரர்களுடன் பேசினர். இது தொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
ராகுல் மற்றும் திராவிட் பேச்சுக்கு தலைமை தாங்கியதால், அணியின் மற்ற உறுப்பினர்களுடன் கோலி பேசாமல் நின்ற காட்சியை காண ரசிகர்கள் அதிக நேரம் எடுக்கவில்லை.
கேப்டன் பொறுப்பிலிருந்து கீழிறங்கிய பிறகு கோலி தனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார், இது ஒரு பேட்ஸ்மேனாக அவரை விடுவிக்கும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். ராகுலைப் பொறுத்த வரையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் அவரது கேப்டன் தகுதிக்கு ஒரு பெரிய சோதனை. தொடக்க பேட்ஸ்மேன் ராகுல் இதற்கு முன்பு தனது இந்தியன் பிரீமியர் லீக் உரிமையான பஞ்சாப் கிங்ஸை வழிநடத்தியுள்ளார், ஆனால் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்துவது இதுவே முதல் முறை.
இந்திய அணியில் நிரந்தர டெஸ்ட் கேப்டனாக ஆக்கக்கூடிய பரிசீலனையிலும் ராகுல் இருக்கிறார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் தனது தலைமைத்துவத்தால் தேர்வாளர்களை கவர முடிந்தால், டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை முழுநேர அடிப்படையில் அவருக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.