ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரு புதுமுக வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரு புதுமுக வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு

ஒரு நாள் தொடர் கோப்பையுடன் போஸ் கொடுக்கும் இரு அணி கேப்டன்கள்

ஒரு நாள் தொடர் கோப்பையுடன் போஸ் கொடுக்கும் இரு அணி கேப்டன்கள்

India vs South Africa | மழை காரணமாக போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று லக்னோவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது.

    இதையும் படிங்க: 77 பந்துகளில் 205 ரன்கள்... டி20-ல் இரட்டை சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

    பின்னர் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் சுழல்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய்க்கு தனது முதல் ஒருநாள் போட்டியில் ஆடுகின்றனர். மேலும் சுப்மன் கில், , ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவினேஷ் கான் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: India vs South Africa