ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மில்லர் மீண்டும் அதிரடி... இந்திய அணிக்கு 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

மில்லர் மீண்டும் அதிரடி... இந்திய அணிக்கு 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

விக்கெட் வீத்திய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்

விக்கெட் வீத்திய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்

110 ரன்களில் 4 விக்கெட்டை இழந்து தடுமாறி தென் ஆப்பிரிக்கா அணி, பின்னர் ஹென்ரிச் கால்சானும் டேவிட் மில்லடின் அதிரடி ஆட்டத்தில் அணியின் ரன்களை உயர்த்தினர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    லக்னோவில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 250 ரன்களை வெற்றி இலக்காக தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயித்துள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று லக்னோவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிதனமாகவே ஆட்டத்தை தொடங்கியது தொடக்க வீரர் மலான் 22 ரன்களில் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த கேப்டன் பவுமாவும் 8 ரன்களில் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    Also Read: 77 பந்துகளில் 205 ரன்கள்... டி20-ல் இரட்டை சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

    நிதனமாக விளையாடிய விக்கெட் கீப்பர் டி காக் 48 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 110 ரன்களில் 4 விக்கெட்டை இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்கா அணி, பின்னர் ஹென்ரிச் கால்சானும் டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டத்தில் அணியின் ரன்களை உயர்தியது.  இறுதியில் 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டை இழந்து 249ரன்களை சேர்ந்தது. ஹென்ரிச் கால்சான் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னாய் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: India vs South Africa, ODI