Home /News /sports /

IND vs SA 4th T20-பந்தை வேகமாக வீசுவது பொருட்டல்ல, அணி வெற்றி பெறுகிறதா என்பதே முக்கியம்- உம்ரன் மாலிக் பற்றி நார்ட்யே

IND vs SA 4th T20-பந்தை வேகமாக வீசுவது பொருட்டல்ல, அணி வெற்றி பெறுகிறதா என்பதே முக்கியம்- உம்ரன் மாலிக் பற்றி நார்ட்யே

ஆன்ரிச் நார்ட்யே.

ஆன்ரிச் நார்ட்யே.

இந்திய அணியில் உம்ரன் மாலிக் என்ற பெயர் அடிபடத் தொடங்கியவுடனேயே உலகில் உள்ள மற்ற முன்னாள், இந்நாள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தங்கள் அடையாளம் பற்றிய கேள்விகள் எழுந்து ஆளுக்கொரு கருத்தை உம்ரன் மாலிக் பற்றி கூறுகின்றனர்.

  இந்திய அணியில் உம்ரன் மாலிக் என்ற பெயர் அடிபடத் தொடங்கியவுடனேயே உலகில் உள்ள மற்ற முன்னாள், இந்நாள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தங்கள் அடையாளம் பற்றிய கேள்விகள் எழுந்து ஆளுக்கொரு கருத்தை உம்ரன் மாலிக் பற்றி கூறுகின்றனர்.

  இந்த Anxiety Neurosis மனநிலைக்கு ஆட்பட்டவர்களில் பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் முதன்மையானவர். அதாவது நமக்குப் புறத்தே நம் சாதனையை முறியடிக்க ஒருவர் வந்து விட்டாரே என்பதால் தன் சாதனை தனக்கு இருப்பதான அவரது கற்பனையான புகழ் போய்விடுமோ என்ற கற்பனையான ஒரு மனக்கவலை, ஒரு இனம்புரியாத பயமே Anxiety Neurosis இது அனைவருக்கும் பொதுவானதுதான். இந்த நிலைக்குத் தீணிபோடுவதற்காகத்தான் தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டுமாறு பேசிக்கொள்வது, மிதமிஞ்சிய தற்புகழ்ச்சி இதன் நோய்க்கூறு, சமீபத்தில் சச்சின் டெண்டுல்கரைத் தான் யார்க்கரில் பவுல்டு செய்ததை ஏதோ உலக மகா சாதனையாக பேசி மகிழ்வது போன்றவை இதன் அறிகுறிகளாம்.

  பொதுவாக புறத்திலிருந்து தன் சுயத்துக்கு அபாயம் ஏற்படும் என்ற கற்பனையான சில வேளைகளில் உண்மையான பயமும் கவலையையும் மனித மனம் உணரும்போது இது போன்ற மனநிலைக்கு ஆட்படுவது சகஜம். இதற்குத் தீர்வு நடப்புண்மையை ஏற்றுக் கொண்டு வாழப்பழகுவது.

  கிரிக்கெட்டில் சாதனை நாயகர்களுக்கு இப்படிப்பட்ட ஆன்க்சைட்டி நியுராசிஸ் ஏற்படும். அதனால்தான் மிதமிஞ்சிய அகங்காரிகளின் அடியாழ மனதில் இத்தகைய பலவீனமும், பலவீனமானவர்கள் மனதின் அடியாழத்தில் மிதமிஞ்சிய தற்புகழ்ச்சியும் இருப்பது மனோமண்டல விவகாரங்கள். அதனால்தான் உளப்பகுப்பாய்வு விஞ்ஞானத்தின் படி Strong mind என்ற ஒன்றே கிடையாது, வலுவான, உறுதியான மனம் என்பது எங்கும் கிடையாது, இது ஒரு கட்டுக்கதை!

  இப்போது ஆன்ரிச் நார்ட்யேவிடம் உம்ரன் மாலிக் உடன் நீங்கள் போட்டி போடுகிறீர்களா, அவர் வேகத்தை எட்ட நீங்கள் போட்டியா? என்று கேட்ட போது, இதே ஆன்க்சைட்டி நியூராசிஸ் மனம் அவரிடமும் எட்டிப்பார்க்க, இப்படிக் கூறுகிறார்:

  நான் இன்னும் சிறந்த உடல்தகுதியை எட்டவில்லை. உடல் அளவில் இன்னும் 100 சதவீத தகுதியை பெறவில்லை. பழைய நிலைக்கு திரும்ப தொடர்ந்து கடினமாக உழைக்கிறேன். பந்துவீச்சில் ஒரு சில விஷயங்களை சரிசெய்ய முயற்சிக்கிறேன். பவுலர்களுக்கு இடையிலான வேகப்போட்டி குறித்து கேட்கிறீர்கள்.

  தற்போது யார் அதிவேகமாக பவுலிங் செய்கிறார்கள் என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. இந்தியாவின் உம்ரான் மாலிக் ஐ.பி.எல்.-ல் மணிக்கு 156.9 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார், சிறந்த பவுலர். அதிவேகமாக பவுலிங் செய்கிறார். அதை களத்திலும் காட்டி இருக்கிறார். அவர் வேகமாக பந்து வீசினால் அவருக்கு நல்லது.

  நான் வேகமாக பந்து வீசினால் எனக்கு நல்லது. யாரும் யாருக்கும் போட்டி அல்ல.மற்றபடி வேகமாக பந்து வீசுவதில் நான் யாருக்கும் போட்டியில்லை. பந்தை வேகமாக வீசுவது ஒரு பொருட்டல்ல. அணியின் வெற்றிக்கு பங்களிப்பு அளிப்பதே முக்கியம்' என்றார்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs South Africa, T20

  அடுத்த செய்தி