Home /News /sports /

உங்க செஞ்சுரியெல்லாம் விட இதுதான் கோலி பெஸ்ட்- கவிதையே எழுதலாம்...கோலியை புகழும் முன்னாள் வீரர்

உங்க செஞ்சுரியெல்லாம் விட இதுதான் கோலி பெஸ்ட்- கவிதையே எழுதலாம்...கோலியை புகழும் முன்னாள் வீரர்

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி அடித்த சதங்களையெல்லாம் விட நேற்று கேப்டவுன் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த 79 ரன்கள்தான் மதிப்பு மிக்கது என்று முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி அடித்த சதங்களையெல்லாம் விட நேற்று கேப்டவுன் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த 79 ரன்கள்தான் மதிப்பு மிக்கது என்று முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் துல்லியமான பந்து வீச்சு மற்றும் ஆக்ரோஷமான களவியூகத்தை எதிர்த்து இந்திய கேப்டன் விராட் கோலி உருமாறிய பேட்டிங் உத்தியுடன் ஆடி 200பந்துகளுக்கும் மேல் ஆடி திராவிட் பாணியில் 79 ரன்கள் எடுத்தார், இதில் 12 பவுண்டரி 1 சிக்ஸ் அடங்கும்.

    157 பந்துகளில் அரைசதம் கண்டு விராட் கோலி தனது மிக மெதுவான 2வது டெஸ்ட் அரைசதத்தை எடுத்து முடித்தார். இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, தென் ஆப்பிரிக்கா 17/1 என்று உள்ளது.

    இந்நிலையில் தன் யூடியூப் சேனலில் ஆகாஷ் சோப்ரா, விராட் கோலியின் இன்னிங்சை புகழ்ந்து தள்ளினார், “பொறுமை, கட்டுக்கோப்பு, உறுதி, அர்ப்பணிப்பு அனைத்தையும் நேற்று கோலியின் பேட்டிங்கில் பார்த்தோம். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்டரிடம் நாம் என்னவெல்லாம் எதிர்பார்ப்போமோ அதன்படி ஆடினார், அவர் அடித்த பல சதங்களை விட இந்த 79 மதிப்பு மிக்கதாகும்.

    மறுமுனையில் இந்திய அணி வீரர்கள் நடையைக் கட்ட விராட் கோலி தனித்து விடப்பட்டார். அவரைப் புகழ்ந்து கவிதை எழுத வேண்டும், அழகான ஷாட்களை ஆடினார், ஆதிக்கத்தையும் பார்த்தோம் அவரது பற்றுதலையும் பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த இன்னிங்சில் ஆதிக்கம் இல்லை, பற்றுதல் மட்டும் தெரிந்தது.

    Also Read: 34 வயதிலேயே அதிர்ச்சி ஓய்வு ஏன்?- ஐபிஎல்-ல் சாதனை விலைக்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ் அவசர முடிவு ஏன்?

    அவர் டிரைவ்களை விளையாடினார், ஆனால் பந்து வீச்சாளர்களை தனக்கு நேராக பந்துவீசுமாறு நிர்பந்தித்தார், அதன் பின்னரே விளையாடினார், இல்லையெனில் அவர் பந்துகளை விட்டுவிடுவார். ஒரு பார்ட்னர் இருந்திருந்தால், அவர் இன்னும் கூடுதல் ரன்கள் எடுத்திருக்கலாம் மற்றும் சதத்திற்கான அவரது காத்திருப்பும்முடிந்திருக்கும்” என்றார் ஆகாஷ் சோப்ரா
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, Virat Kohli

    அடுத்த செய்தி