முகப்பு /செய்தி /விளையாட்டு / ரபாடா என்ன டெல்லி கேப்பிடல்ஸ் நெட் பவுலரா? ரிஷப் பண்ட் ஒரு ‘ஹைப்’, ‘சின்னப்பையன்’என்று நிரூபித்த ரபாடா

ரபாடா என்ன டெல்லி கேப்பிடல்ஸ் நெட் பவுலரா? ரிஷப் பண்ட் ஒரு ‘ஹைப்’, ‘சின்னப்பையன்’என்று நிரூபித்த ரபாடா

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில் இந்தியா உணவு இடைவேளையின் போது 188/6 என்று சரிவு கண்டு 161 ரன்களையே முன்னிலையாகப் பெற்றுள்ளது. ஆனால் இன்றைய பேசுபொருள் ரிஷப் பண்ட் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததுதான்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா உணவு இடைவேளையின் போது 188/6 என்று சரிவு கண்டு 161 ரன்களையே முன்னிலையாகப் பெற்றுள்ளது. ஆனால் இன்றைய பேசுபொருள் ரிஷப் பண்ட் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததுதான்.

ரபாடாவிடம் டக் அவுட் ஆகி வெளியேறினார், அதுவும் 2வது முறையாக இந்தத் தொடரில் ரபாடாவின் பந்துக்கு டவுன் த ட்ராக் இறங்கி வந்து அசிங்கமாக ஆட்டமிழந்தார் ரிஷப் பண்ட். கவாஸ்கர் உடனேயே ‘படுமோசமான ஷாட், அவர் இயல்பான அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடினார் என்ற ‘நான்-சென்ஸ்’ எத்தனை நாளைக்கு சொல்லப் போகிறோம்?’ என்று கடும் விமர்சனத்தை முன் வைத்ததோடு, புஜாரா உடலில் வாங்குகிறார், ராகுல் வாங்குகிறார், ரகானே வாங்குகிறார், விகாரி வாங்குகிறார், ரிஷப் பண்ட் என்றைக்கு சென்சிபிள் ஆக ஆடப்போகிறீர்கள் என்று கவாஸ்கர் கேட்கிறார். அவர் கேட்பது அப்பட்டமான உண்மைதான்.

ஆஸ்திரேலியாவில் டிம் பெய்ன் என்ற ஒன்றுக்கும் உதவாத கேப்டன் இருந்தார், ரிஷப் பண்ட் அடிக்க ஆரம்பித்தவுடன் பீல்டரை தள்ளித்தள்ளி நிறுத்தி சகாயம் செய்து கொடுத்தார் சிட்னியில் பிரமாதம் காட்டினார், பிரிஸ்பனில் வெற்றி பெறச் செய்தார், இங்கிலாந்துடன் இங்கு சென்னையிலும் அகமதாபாத்திலும் விளாசினார், ஆனால் இங்கிலாந்தில் கொஞ்சம் கொஞ்சம் சொதப்பினார். சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி ஆடாமல் அவரை உசுப்பேற்றி உசுப்பேற்றி, கில்கிறிஸ்ட் என்றெல்லாம் கூறி அவர் கரியரை நாசம் செய்து வருகின்றனர். ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் சராசரி 23.5; தென் ஆப்பிரிக்காவில் - 19.6- நியூசிலாந்துடன்- 15.0 என்று சராசரி வைத்துள்ளார்.

இன்று ரகானே, புஜாரா அருமையாக ஆடி அணியின் முன்னிலையை உயர்த்தியுள்ள நிலையில் எப்படி ஆட வேண்டும்? ரபாடா வீசிய பந்து ஒன்று கண்டபடி எகிறி அவரது கைவிரல்களையும் ஹெல்மெட் கம்பியையும் பதம் பார்த்தது, இதில் கொஞ்சம் பயந்துதான் போய்விட்டார் சின்னப்பையன் ரிஷப் பண்ட், டெல்லியின் அண்டர்-16 பவுலரா வீசுகிறார் அடுத்த பந்தை ரபாடா மீண்டும் ஆக்ரோஷமாக வீச ஓடி வரும்போது ரிஷப் பண்ட் மேலேறி வருகிறார், ரபாடா என்ன டெல்லி கேப்பிடல்ஸ் நெட் பவுலரா, அல்லது வீட்டுக் கொல்லைப்புற கிரிக்கெட்டா இது? டெஸ்ட் கிரிக்கெட்பா ரிஷப் பண்ட்.

மேலேறி வந்து ஏதோ சுற்றினார் பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது, டக் அவுட் ஆனார், இந்தத் தொடரில் ரபாடாவை இரண்டாவது முறையாக டவுன் த டிராக் வந்து ஆட்டமிழந்தார். நம் காலத்து மைக்கேல் ஹோல்டிங் போன்றுதான் ரபாடா, அவர் என்ன டெல்லி கேப்பிடல்ஸ் நெட் பவுலரா? ரிஷப் பண்ட் மரியாதை கொடுக்கப் பழக வேண்டும், இல்லையெனில் கடினமான பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

கேப்டன்கள் தங்கள் பேன்சி ரக கற்பனையில் ரிஷப் பண்ட்டை தட்டி விட்டு ஆக்ரோஷம், அதிரடி என்று மாற்றியுள்ளனர், இதை ரிஷப் பண்ட் உடனடியாக உணர்ந்து தன் கரியரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் விரைவில் எக்ஸ்போஸ் ஆவார், அவரிடம் ஒன்றுமில்லை என்பது அம்பலமாகி கிரிக்கெட்டை விட்டே வேதனையுடன் வெளியேற வேண்டி வரும் அன்று இந்த கோலியோ, ரவிசாஸ்திரியோ யாரும் துணைக்கு வரமாட்டார்கள் என்ற உலக எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் ரிஷப் பண்ட்.

தோனியிடமிருந்து ஒரு இலையை உருவிக்கொள்ள வேண்டும், அவரை ராகுல் திராவிட், கங்குலி போன்றோர் இப்படித்தான் தங்கள் பேன்சிக்காக ஹிட்டர், புட்டர் என்று தட்டி விட்டனர், ஆனால் அவர் சிறந்த கரியரிஸ்ட் என்பதால் புரிந்து கொண்டு டேய் நான் அதெல்லாம் இல்லை எனக்கும் ஒரு கரியர் இருக்கு, அதனால் நான் கொஞ்சம் நின்று நிதானித்தே ஆடுவேன் என்று மாறினார், இன்று நிலைத்து நிற்கிறார்.

அதே போல் ரோகித் சர்மா, அவரை தொடக்க வீரராக இறக்கும் போது சேவாக்கின் மறு உருவமாகவே அனைவரும் நினைத்தனர், ஆனால் அவரும் டேய் உங்க பேன்சிக்கு நான் ஆள் கிடையாது, நான் கவாஸ்கர் பாணியில்தான் ஆடுவேன் என்று இன்று ஸ்திரமான தொடக்க வீரராக மாறியுள்ளார்.

ஆகவே ரிஷப் பண்ட் பாடம் கற்றுக் கொண்டு ஒழுங்காக கட்டுக்கோப்புடன் பொறுப்பாக ஆடினால் அணியில் மட்டுமல்ல கிரிக்கெட்டில் நீடிப்பார் இல்லையெனில் அவர் இடத்தைக் கொத்திக் கொள்ள 10-15 விக்கெட் கீப்பர்களாவது உள்ளனர். ரொம்ப போச்சுன்னா, ராகுலை கீப் செய்யச் சொல்லி விட்டு இன்னொரு பவுலரையோ, பேட்ஸ்மெனையோ அணியில் சேர்த்து விடுவார்கள் உடனடியாக இஷான் கிஷன், கே.எஸ். பரத், விருத்திமான் சஹா உள்ளனர்.

top videos

    ஆகவே இன்றைய தேதியில் ரகானே, புஜாரா இடம் கூட நீடிக்க வாய்ப்புண்டு, ஆனால் ரிஷப் பண்ட் கரியர்தான் ஆட்டத்தில் இருக்கிறது என்பதை அவர் உணர்ந்து ஆடினால் இந்திய அணிக்கும் நல்லது, அவருக்கும் நல்லது.

    First published:

    Tags: India vs South Africa, Rishabh pant