• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியாவுடனான T20 போட்டி குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் வீரர்!

இந்தியாவுடனான T20 போட்டி குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் வீரர்!

Waqar younis

Waqar younis

வக்கார் யூனிஸின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், கிரிக்கெட் துறையைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் யூனிஸை கண்டித்து பதிவிட்டனர்.

  • Share this:
இந்தியாவுடனான உலகக் கோப்பை டி20 போட்டி தொடர்பாக மத துவேஷத்தை வெளிப்படுத்தும் வகையிலான கருத்து தெரிவித்ததால் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான வக்கார் யூனிஸ் தொலைக்காட்சி நேரலையில் தெரிவித்த கருத்து ஒன்று சமூக வலைத்தளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

துபாயில் தொடங்கி நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் ரிஸ்வான் (79*), பாபர் ஆசாம் (68*) ஆகியோரின் நிலையான ஆட்டத்தினால் 152 ரன்களை விரட்டிப்பிடித்து இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். உலகக் கோப்பை தொடரில் அதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்ற நிலை அன்று தகர்க்கப்பட்டது. பாகிஸ்தான் ரசிகர்களின் பல்லாண்டு ஏக்கம் இதன் மூலம் தீர்ந்தது.



அன்றைய தினம், மேட்ச் முடிந்தவுடன் பாகிஸ்தானின் ARY News என்ற தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் முன்னாள் வீரர்களான வக்கார் யூனிஸ் மற்றும் சோயிப் அக்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது வக்கார் யூனிஸ் பேசுகையில், “பாபர் ஆசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் பேட்டிங் செய்த விதம் மிகவும் அருமையாக இருந்தது. அவர்கள் ஸ்டிரைக் ரொடேட் செய்தது, அவர்களின் லுக் மிகப் பிரமாதமாக இருந்தது.

Also read: மகன் ஆர்யனை கைது செய்த NCB அதிகாரி ஷாருக்கானை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியவர் – எதற்கு?

இதை விட சிறப்பானது என்றால், போட்டியின் நடுவே இந்துக்கள் முன்னிலையில் ரிஸ்வான் நமாஸ் செய்தது தான். அது தான் எனக்கு மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்று” இவ்வாறு கூறியிருந்தார்.



வக்கார் யூனிஸின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், கிரிக்கெட் துறையைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வக்கார் யூனிஸை கண்டித்து பதிவுகள் இட்டனர்.

Also read:  தன்னைவிட 13 வயது குறைந்த ஆட்டோ டிரைவருடன் மாயமான கோடீஸ்வரரின் மனைவி..

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வசீம் ஜாஃபர், வெங்கடேஷ் பிரசாத், பிரபல கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே போன்றோர் வக்கார் யூனிஸை விமர்சித்து பதிவிட்டிருந்தனர்.

இதனிடையே தனது கருத்துக்கு பெரும் கண்டனக் குரல்கள் கிளம்பியதை அடுத்து, வக்கார் யூனிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “உற்சாக மிகுதியில் அந்த நேரத்தில் அவ்வாறு தெரிவித்துவிட்டேன். பலரின் மனங்களை காயப்படுத்திய அந்த கருத்தை நான் வேண்டுமென்றே அப்படி கூறவில்லை. அது தவறானதாகும். இதற்காக என்னை மன்னியுங்கள். விளையாட்டு மக்களை இனம், நிறம், மதம் கடந்து ஒன்றிணைக்கிறது.” இவ்வாறு வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: