• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை யுத்தம்.. கடந்த கால வரலாறு சொல்வது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை யுத்தம்.. கடந்த கால வரலாறு சொல்வது என்ன?

இந்தியா vs பாகிஸ்தான்

இந்தியா vs பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பை தொடர்களில் முழுமையாக வீழ்த்தி தோல்வியை சந்திக்காதா அணியாக இந்தியா வீறுநடை போடுகிறது.

  • Share this:
    இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம் தான். உலகக் கோப்பை போட்டி என்றால் கூடுதல் ஸ்பெஷல். இதற்கு காரணம் என்ன? இரு அணிகளும் இதற்கு முன் மோதியதில் ஆதிக்கம் செலுத்தும் அணி எது புள்ளி விபரங்களோடு பார்ப்போம்.

    இந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை யுத்தம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உணர்வுப்பூர்வமாக கட்டிப்போடும் கிரிக்கெட் திருவிழா.பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பை தொடர்களில் முழுமையாக வீழ்த்தி தோல்வியை சந்திக்காதா அணியாக இந்தியா வீறுநடை போடுகிறது.

    20 ஓவர், 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர் இதில் அனைத்திலும் இந்தியா வெற்றி வாகை சூடி சாதனை மேல் சாதனை நிகழ்த்தியுள்ளது.1992 முதல் 2019 வரை நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை இரு அணிகளும் மோதியுள்ளன இதில் அனைத்திலும் இந்தியாவிற்கே வெற்றி முகம்.

    அதே போல் 2007 முதல் 2016 வரை நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் ஐந்து முறை இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. ஐந்திலும் இந்தியா வெற்றி வாகை சூடி அசத்தியுள்ளது.சர்வதேச அளவிலான டி 20 போட்டிகளில் இரு அணிகளும் 8 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளனர் இதில் 7 போட்டிகளில் இந்தியா வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.

    உலகக் கோப்பையில் இரு அணிகளின் முதல் சந்திப்பாக 2007 ம் ஆண்டு நடைபெற்ற லீக் போட்டி அமைந்தது.விறுவிறுப்பின் உச்சம் தொட்ட அந்த போட்டி சமனில் முடிய சூப்பர் ஓவரில் வென்ற இந்தியா, ஒருநாள் உலகக் கோப்பை போட்டி சாதனையை டி 20 போட்டிகளிலும் தக்கவைத்தது. 2012 ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் வென்ற முதலும் கடைசியுமாக வெற்றியை வசப்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: