ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் அதிர்ச்சி...

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் அதிர்ச்சி...

மாதிரி படம்

மாதிரி படம்

நாளை மெல்ர்போனில் நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

 • 2 minute read
 • Last Updated :
 • interna, Indiamelbournemelbourne

  டி20 உலககோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது. 

  8வது 20 ஓவர் உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. மெல்போர்னில் நடைபெறும் இந்த போட்டி ரசிகர்களிடையே  எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் இரண்டு முறை மட்டுமே ஐசிசி தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றது. குறிப்பாக கடந்த ஆண்டு யுஏஇ-யில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த இலக்கை விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.  அதற்கு பழிவாங்க இந்திய அணி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.

  இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் பலமாக இருந்தாலும் பந்துவீச்சில் கடந்த சில நாட்களாக சொதப்பி வருகிறது. இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் வீராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் இந்தியா அணியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் பெரும் பலமாக இந்திய அணிக்கு உள்ளது.

  Also Read: சாம் கரன் அபாரம்: சொற்ப இலக்கை அடைய இங்கிலாந்தை திணற வைத்த ஆப்கானிஸ்தான்

  பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் நல்ல நிலையில் உள்ள நிலையில் பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நல்ல விதமாக கடைசி ஓவரை வீசி நம்பிக்கை அளித்துள்ளார். ஆல் ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் கடந்த சில நாட்களாக கவனம் பெற்று வருகிறார்.

  இந்திய அணி எப்படி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறதோ அதேபோல் பாகிஸ்தான் அணியும் சம பலத்துடன் இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இந்திய அணியுன் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளனர். அதேபோல் பந்துவீச்சில்  ஜாகின் அப்ரிடி,ஹாரிஸ் ரவூப், முகமது நவாஸ் உள்ளிட்ட பந்துவீச்சாளர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள்.

  Also Read: பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்குமா? கேப்டன் ரோகித் சர்மா சொன்ன கூல் பதில்

  இரு அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டியில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் இதுவரை 11 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா 8 போட்டிகளில் பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

  இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இது ஒருபுறம் இருக்க நாளை ஆட்டம் நடைபெறும் மெல்ர்போனில் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 80 முதல் 90 சதவீதம் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம். அப்படி மழை தொடர்ந்து பெய்தால் 5 ஓவர்கள் கொண்டு போட்டி நடத்தவும் வாய்ப்புள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India vs Pakistan, Melbourne, T20 World Cup