ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IND vs PAK T20 WC Live Streaming : இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரம் எப்போது, நேரலையில் எங்கு பார்க்கலாம்?

IND vs PAK T20 WC Live Streaming : இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரம் எப்போது, நேரலையில் எங்கு பார்க்கலாம்?

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

India vs Pakistan | இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இந்திய நேரப்படி பிற்பல் 1:30 மணிக்கு தொடங்குகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை சந்திக்க உள்ளது. இரு அணிகளுக்கும் சூப்பர்-12 சுற்றின் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்கும் வகையில் நடைபெறவுள்ளது.

  இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே நேரத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அதே சமயம், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. பாகிஸ்தானின் இரண்டாவது பயிற்சி ஆட்டம் ஆப்கானிஸ்தானுடன் இருந்தது, ஆனால் இந்த போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது.

  Also Read : பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்குமா? கேப்டன் ரோகித் சர்மா சொன்ன கூல் பதில்

  இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இந்திய நேரப்படி பிற்பல் 1:30 மணிக்கு தொடங்குகிறது. ஆட்டம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக பிற்பகல் 1.00 மணிக்கு டாஸ் போடப்படும். இந்த போட்டியினை ஸ்டார் ஸ்போர்ட் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். இது தவிர டிடி ஸ்போர்ட்ஸிலும் நேரலையாக பார்க்கலாம். ஆன்லைனில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்படும். இன்றைய போட்டியில் வானிலை மிகவும் அச்சுறத்தலை ஏற்படுத்தி வருகிறது. உள்ளூர் தகவல்களின்படி போட்டியில் மழை குறுக்கிட 60 சதவீத வாய்ப்புகள் உள்ளது.

  இந்திய அணி : ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.

  பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (வி.கீ), ஷான் மசூத், ஃபக்ர் ஜமான், ஆசிப் அலி, இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா மற்றும் முகமது வாசிம்

  Published by:Vijay R
  First published:

  Tags: India vs Pakistan, T20 World Cup