ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அது நோ பால் தானா? கடைசி ஓவரில் ஏற்பட்ட பல குழப்பங்கள்: என்ன சொல்கிறது ஐசிசி ரூல்?

அது நோ பால் தானா? கடைசி ஓவரில் ஏற்பட்ட பல குழப்பங்கள்: என்ன சொல்கிறது ஐசிசி ரூல்?

கடைசி ஓவரில் ஏற்பட்ட குழப்பங்கள்

கடைசி ஓவரில் ஏற்பட்ட குழப்பங்கள்

விராட் கோலிக்கு வழங்கியது நோ-பாலே கிடையாது அம்பயர் தவறாக வழங்கிவிட்டதாக பெரும் விவதாமே ஏற்படுத்தியுள்ளது

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலககோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டி குறித்து தான் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

  டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி தன் கடைசி வரை நின்று இந்திய அணிக்கு மறக்க முடியாத வெற்றியை தேடி தந்தார்.

  பரபரப்பாக சென்ற போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை எதிர்கொண்ட பாண்டியா தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2-வது பந்தில் திணேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்தார். இதனால் 4 பந்துகளில் 15 ரன்கள் என்ற நிலையில் 3-வது பந்தில் விராட் கோலி 2 ரன்கள் சேர்த்தார். அடுத்து விராட் கோலியின் இடுப்புக்கு மேல் ஃபுல்டாஸாக வந்த பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். கூடுதலாக நோ பால் அதனுடன் அடுத்த பந்து ஃப்ரி ஹிட்டாக அமைந்நது. அடுத்த பந்து வொய்டாக அமைய ஃப்ரி ஹிட் தொடர்ந்து இருந்தது.

  4-வது பந்து ஸ்டெம்பில் பட்டாலும் ஃப்ரி ஹிட் என்பதால் 3 ரன்களை ஓடி எடுத்தனர். இதனால் 2 பந்துகளில் 2 ரன்கள் என்று இருக்க 5-வது பந்தில் திணேஷ் கார்த்திக் அவுட்டானர். இதனால் ஒரு பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் போட்டி பரபரப்பின் உச்சத்திற்கே சென்றது. ரவிசந்திரன் அஸ்வின் எதிர்கொண்ட போது பவுலர் வொய்டு வீசி ரன்கள் சமநிலையானது. கடைசி பந்தை அஸ்வின் தூக்கி அடித்து ரன் சேர்த்ததால் இந்திய அணி வெற்றி பெற்றது.

  இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் வந்துள்ள புதிய விதிமுறைகள் என்ன? யாருக்கு சாதகம்..?

  இந்த நிலையில் பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர் கடைசி ஓவரை முகமது ரியாஸ் வீசினார். இதில் 4வது பந்தை புல் டாஸாக வீனார்,. அதனை விராட் கோலி மடக்கி (Square Leg) திசையில் அடித்த பந்து சிக்சருக்கு பறந்தது. இதனையடுத்து விராட் கோலி உடனடியாக நடுவரிடம் நோ-பால் என கேட்டார். அதற்கு நோ-பால் வழங்கினார் நடுவர். இதனையடுத்து அங்கு வந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் லெக்-அம்பயரிடம் இது நோ-பால என கேட்டார். இறுதியில் லேக் அம்பயறும் நோ-பால் என கூறியதால் விரக்தியில் அங்கிருந்து சென்றார் பாபர் அசாம்.

  விராட் கோலி அடித்த நோ-பால்

  இந்த நிலையில் கோலிக்கு வழங்கியது நோ-பாலே கிடையாது அம்பயர் தவறாக வழங்கிவிட்டதாக பெரும் விவதாமே ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நோ-பால் குறித்த ஐசிசி விதிமுறை என்ன சொல்கிறது என்று பார்போம். 41.7.1 கிரிக்கெட் விதிமுறைப்படி பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களுக்கு பிட்ச் செய்யாமல் அவர்களுக்கு இடுப்புக்கு மேல் சென்றால் அது நோ பால் என்றே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என கடந்த 2017ஆம் ஆண்டு புதிய விதிமுறையை வகுத்தது ஐசிசி.

  மேலும் இடுப்புக்கு மேல் பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசினால் நோ-பாலா இல்லை என லெக்-அம்பயர் முடிவு செய்யலாம் எனவும் அந்த விதிமுறை மாற்றியது ஐசிசி. இதனால் நேற்றைய பாகிஸ்தான் -இந்தியா போட்டியில் முகமது ரியாஸ் கோலிக்கு வீசிய நோ-பாலை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருக்கவில்லை.

  இதையும் படிங்க: ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகரின் பதிவிற்கு கெத்தாக ரிப்ளை செய்த சுந்தர் பிச்சை - இணையத்தில் வைரல்

  இந்த நிலையில் நோ-பாலுக்கு அடுத்த வீசிய (Free Hit)பந்து ஸ்டேம்பை பதம் பார்த்து பின் திசையில் பவுண்டரியை நோக்கி ஓடியது. இதில் விராட் கோலி மூன்று ரன்களை சேகரித்தார். ரன் ஓடியது குறித்து பாகிஸ்தான் வீரர்கள் நடுவரிடம் முறையிட்டு விளக்கம் கேட்டு சென்றனர். அப்போழுது கிரிக்கெட் வர்ணையாளர் ஹர்ஷா போக்லே நேரலை இது ஒரு டெத் பந்துகளாக இருக்கலாம் என கூறினார். ஆனால் அந்த பந்து Free Hit ஆக கணக்கில் எடுத்துக்கொண்டு ரன்களும் இந்திய அணி கணக்கில் சேர்க்கப்பட்டது.

  ஃப்ரி ஹிட்டில் போல்ட் ஆனார் விராட் கோலி

  இதேபோல் கடந்த வாரம் வெபர் டபிள்யூபிபிஎல்-ல் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது, பெர்த்தின் பைபா கிளியரி ஒரு ஃப்ரீ ஹிட்டில்அன்னாபெல் சதர்லேண்டால் பவுல்டு செய்யப்பட்டு பந்து பவுண்டரி லைனை நோக்கி சென்று ரன்களும் அந்த அணிக்கு வழங்கப்பட்டது.

  இந்த நிலையில் கிரிக்கெட் 21.19.2 விதிகளின்படி (Free Hit)ஃப்ரீ ஹிட் பந்தில் பேட்ஸ்மேனை ரன் அவுட் மூலமாக மட்டுமே வெளியேற்ற முடியும் மற்றும் பேட்ஸ்மேன்கள் இரண்டு முறை பந்தை அடிப்பதன் மூலமாகவே பேட்ஸ்மேனை அவுட் செய்ய முடியும் என்பது விதிமுறை உள்ளது. இப்படி பல குழப்பங்களுக்கு இடையே இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கடைசி ஓவர் வீச 12 நிமிடங்கள் ஆனது குறிப்பிடதக்கது.

  போட்டோ கேலரி.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India vs Pakistan, T20 World Cup