கடைசி பந்துவரை போராடுங்கள்! பாகிஸ்தான் வீரர்களுக்கு இம்ரான்கானின் மூன்று ஆலோசனைகள்

உங்கள் மனதிலிருந்து தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தை தூக்கி எறியுங்கள். உங்கள் மனது ஒரு நிலையில் இருக்க வேண்டும்.

news18
Updated: June 16, 2019, 4:36 PM IST
கடைசி பந்துவரை போராடுங்கள்! பாகிஸ்தான் வீரர்களுக்கு இம்ரான்கானின் மூன்று ஆலோசனைகள்
ரோஹித் சர்மா
news18
Updated: June 16, 2019, 4:36 PM IST
போட்டியில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தை மனதில் இருந்து போக்கிவிட வேண்டும் என்று பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கான போட்டி என்பதால், மிகப் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவிவருகிறது. உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை.

இம்ரான் கான்


அதனால், இந்தியாவை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்ற நெருக்கடி பாகிஸ்தான் உள்ளது. மேலும், இந்திய அணியும் நல்ல ஃபார்மில் உள்ளது. எனவே, பாகிஸ்தானுக்கு கூடுதல் நெருக்கடி இருந்துவருகிறது. இந்தநிலையில், பாகிஸ்தான் பிரதமர் அந்நாட்டு உலகக் கோப்பையை வென்றபோது கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான் கான், பாகிஸ்தான் வீரர்களுக்கு மூன்று டிப்ஸ் அளித்துள்ளார்.

அதில், ‘முன்னர், போட்டியின் வெற்றியைத் தீர்மானிப்பது 50% திறமை, 50% மனநிலை என்று எண்ணியிருந்தேன். தற்போது போட்டியில் வெற்றியைத் தீர்மானிப்பது, 70% சதவிதம் திறமை; 30% சதவிதம் மனநிலை என்று கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.

இரண்டாவதாக, ’தைரியமான சர்பிரஸ் அகமதுவை கேப்டனாக பெற்றிருப்பது வரம். உங்கள் மனதிலிருந்து தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தை தூக்கி எறியுங்கள். உங்கள் மனது ஒரு நிலையில் இருக்க வேண்டும். தோல்வி பயம் உங்களை எதிர்மறையான திசையை நோக்கி அழைத்துச் செல்லும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாவதாக, மைதானம் ஈரப்பதமாக இருந்தால் தவிர, சர்பிராஸ் அகமது, டாஸ் வெற்றி பெற்று பேட்டிங்கைத் தேர்வு செய்யவேண்டும். டாஸ் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தாலும், தோல்வி பயத்தை போக்க வேண்டும். உங்களை சிறந்த பங்களிப்பை கொடுங்கள். கடைசிப் பந்துவரை சண்டையிடுங்கள். பிறகு, எந்த முடிவு வந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். தேசத்தின் பிரார்த்தனை உங்களுடன் இருக்கும். எல்லாம் சிறப்பாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading...
Also see:

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...