• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கான்பூர் டெஸ்ட் : இந்திய அணியின் 11 வீரர்கள் யார்?

கான்பூர் டெஸ்ட் : இந்திய அணியின் 11 வீரர்கள் யார்?

முதல் டெஸ்ட் ரஹானே கேப்டன்

முதல் டெஸ்ட் ரஹானே கேப்டன்

இந்தியப் பிட்ச் என்பதால் ராகுல், புஜாரா, ரகானே நிச்சயம் பிரகாசிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

  • Share this:
    கான்பூரில் வியாழனன்று (25ம் தேதி) நியூசிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷமி, பும்ரா போன்ற ஜாம்பவான்கள் இல்லை. இந்த வாய்ப்பை நிச்சயம் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பயன்படுத்தி தொடரை வெல்ல முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

    இந்திய அணியில் மூத்த வீரர்கள் இல்லாமலேயே ஆஸ்திரேலியாவில் போய் அந்த அணியை மண்ணைக்கவ்வச் செய்த அஜிங்கிய ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. நியூசிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவு டெவன் கான்வே என்ற அதியற்புத டெஸ்ட் வீரரும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு குடைச்சல் கொடுக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாலர் ட்ரெண்ட் போல்ட் இல்லாதது.

    ஆனால் டிம் சவுதி ஒரு அருமையான அனைத்து சூழ்நிலைக்கும் உகந்த ஸ்விங் பவுலர், 7 அடி உயர கைல் ஜேமிசன் இருக்கிறார், நீல் வாக்னர் என்ற ஷார்ட் பிட்ச் பவுலிங் ஸ்பெஷலிஸ்ட் இருக்கிறார். அஜாஜ் படேல் ஒரு இடது கை ஸ்பின்னர். வில்லியம் சோமர்வில் ஒரு ஆஃப் பிரேக் பவுலர் ஆகியோர் உள்ளனர், ஸ்பின்னர்கள் இங்கு அனுபவம் இருந்தால் மட்டுமே சிறப்பாக வீச முடியும், ஆனால் ஒரு டீசண்டான பிட்சில் வேகப்பந்து வீச்சு புஜாரா, ரகானே, ராகுல் ஆகிய அனுபவ வீரர்கள் மட்டுமே கொண்ட வரிசையை நினைத்தால் பதம் பார்க்கலாம்.

    கேன் வில்லியம்சன் ஒரு பிரில்லியண்ட் கேப்டன், நிச்சயம் நாம் ஃப்ரீயாக ரன்கள் எடுக்க விடமாட்டார், களவியூகத்தின் மூலம் டைட் பவுலிங்கை வீசச் செய்து இந்திய பேட்டர்களை வெறுப்பேற்றி விக்கெட்டுகளை எடுப்பதில் அவர் கவனம் செலுத்துவார். ரிஷப் பண்ட் இல்லாதது ஒரு பின்னடைவு. ஆனால் ஷுப்மன் கில் வருகை, மாயங்க் அகர்வால் வருகை ஒரு பெரிய பிளஸ்.

    இந்தியப் பிட்ச் என்பதால் ராகுல், புஜாரா, ரகானே நிச்சயம் பிரகாசிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். கான்பூர் பிட்ச் நிச்சயம் ஃபிளாட் ஆக பேட்டிங்குக்குச் சாதகமாக குறைந்தது முதல் 2 நாட்களுக்காவது இருக்கும். நியூசிலாந்து அணிக்கு பெரிய அச்சுறுத்தலே குழிப்பிட்ச்தான். குழிப்பிட்சை போட்டால் அஸ்வின், அக்சர் படேல் புகுந்து விடுவார்கள். ஆகவே நேர்மையான பிட்சைப் போட வேண்டும்.

    அப்படி பிட்சை நேர்மையாகப் போட்டால் நல்ல டெஸ்ட் கிரிக்கெட் பார்த்த மகிழ்ச்சி கிடைக்கும். இல்லையெனில் நியூசிலாந்து மோசமாகத் தோல்வி அடைவதை தவிர வேறு வழியில்லை.

    முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வருமாறு:

    ரஹானே (கேப்டன்) கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால், புஜாரா, ஷுப்மன் கில், , விருத்திமான் சகா, அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், உமேஷ் யாதவ், சிராஜ் அல்லது இஷாந்த் சர்மா.

    இதில் நிச்சயம் சிராஜ் தான் இருப்பார் என்று தெரிகிறது, இஷாந்த் சர்மா தன் பவுலிங்கை கொஞ்சம் சரி செய்ய வேண்டியிருக்கிறது. மிகவும் குனிந்து முட்டிக்காலை மடக்கி வீசும் முறை வந்து விட்டது என்றாலே அவருக்கு வயதாகி வருகிறது என்று பொருள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: