• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IND vs NZ | கான்பூர் டெஸ்ட்டில் மாற்றியமைக்கப்பட்ட இந்திய அணியின் 11 வீரர்கள்

IND vs NZ | கான்பூர் டெஸ்ட்டில் மாற்றியமைக்கப்பட்ட இந்திய அணியின் 11 வீரர்கள்

கான்பூர் டெஸ்டில் அறிமுகமாகிறார் ஷ்ரேயஸ் அய்யர்.

கான்பூர் டெஸ்டில் அறிமுகமாகிறார் ஷ்ரேயஸ் அய்யர்.

மாற்றியமைக்கப்பட்ட இந்திய லெவன் இதோ: சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், ரஹானே (கேப்டன்), சாஹா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஆர் அஸ்வின்முகமது சிராஜ்/இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்

  • Share this:
    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே கான்பூரில் நாளை (வியாழன், 25-11-2021) காலை தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரஹானே தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் ஷர்மா, பும்ரா, ரிஷாப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கும் பணிச்சுமை கருதி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்நிலையில் மாற்றியமைக்கப்பட்ட லெவன் இதுதான்.

    இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என்று கேப்டன் ரஹானே உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக உள்ளார்.

    ஆகவே மாற்றியமைக்கப்பட்ட இந்திய லெவன் இதோ:

    சுப்மன் கில்
    மயங்க் அகர்வால்
    புஜாரா
    ஷ்ரேயாஸ் ஐயர்
    ரஹானே (கேப்டன்)
    சாஹா (விக்கெட் கீப்பர்)
    ரவீந்திர ஜடேஜா
    அக்சர் படேல்
    ஆர் அஸ்வின்
    முகமது சிராஜ்/இஷாந்த் சர்மா
    உமேஷ் யாதவ்

    இந்தியா-நியூசிலாந்து அணிகள்தான் ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் டாப் 2 அணிகளாகும். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு சாதகமான பிட்சில் வென்றனர். இந்திய அணி அந்தப் போட்டியை மதிக்காமல் ஆடியதால் தோல்வியடைந்தது, ஆனால் அதற்கு பழிதீர்க்க குழிப் பிட்சை போட்டு அக்சர் படேலின் நெர் நேர் தேமாவை வைத்து வீழ்த்தி விடலாம் என்று முயன்றால் அது அசிங்கம்தான்.

    ரஹானேவும் செய்தியாளர்கள் சந்திப்பில், உள்நாட்டு சாதக அம்சங்களை விடாமல் பயன்படுத்துவோம் என்று கூறியிருப்பதால் கான்பூர் கிரீன் பார்க் பிட்ச் பிரவுன் பார்க் புழுதி பிட்சாக குழிபிட்சாக இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

    இந்தியாவில் இதுவரை 34 டெஸ்ட்கள் ஆடி 2 டெஸ்ட் போட்டிகளில்தான் நியூசிலாந்து வென்றுள்ளது. கடைசியாக 1988-ல் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றது. அஸ்வின் இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் ஹர்பஜன் சிங்கின் 417 விக்கெட்டுகள் சாதனையை கடந்து விடுவார்.

    உமேஷ் யாதவ் இன்னும் 4 விக்கெட்டுகள் எடுத்தால் உள்நாட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்து கபில்தேவ், ஸ்ரீநாத், ஜாகீர் கான், இஷாந்த் சர்மா வேகப்பந்து வரிசையில் இணைவார்.

    மாறாக இந்திய பேட்ஸ்மென்கள் பவுன்சர் சோதனைகளை எதிர்கொள்ளலாம், கைல் ஜேமிசன், நீல் வாக்னர் நிச்சயம் பவுன்சர் சோதனைகளைக் கொடுப்பார்கள். கேன் வில்லியம்சன் ஸ்பின் பவுலிங்கை அபாரமாக ஆடக்கூடியவர். ராஸ் டெய்லர் ஒரு அபாய வீரர் சிக்கினால் செஞ்சுரி அடித்து விடுவார்.

    நியூசிலாந்து அணி: டாம் லேதம், வில் யங், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளெண்டல், கைல் ஜேமிசன் அல்லது சாண்ட்னர், டிம் சவுதீ, அஜாஜ் படேல், வில் சோமர்வில், நீல் வாக்னர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: