• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: பயிற்சியைத் தொடங்கிய கேப்டன், துணைக் கேப்டன்

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: பயிற்சியைத் தொடங்கிய கேப்டன், துணைக் கேப்டன்

ரகானே

ரகானே

  • Share this:
    மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட கேப்டன் ரகானே, துணைக் கேப்டன் புஜாரா உட்பட இந்திய வீரர்கள் பயிற்சியை துவக்கினர்.

    இந்திய வந்துள்ள நியூசிலாந்து அணி 3 டி20 தொடர் முடிந்த பிறகு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ. 25-29ல் கான்பூர், கிரீன் பார்க் மைதானத்திலும் இரண்டாவது டெஸ்ட் டிச. 3-7ல் மும்பையில் நடக்கவுள்ளன. இதற்கான இந்திய அணி கேப்டன் கோலிக்கு முதல் டெஸ்டில் ஓய்வு தரப்பட்டுள்ளது. இவருக்குப் பதில் ரகானே கேப்டனாக களமிறங்குகிறார்.

    கடைசியாக கோலி தன்னுடைய மகள் பிறப்புக்காக நாடு திரும்பியது போது, மெல்போர்ன் டெஸ்டில் கேப்டனாக களமிறங்கிய ரகானே, 112 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் பின் பங்கேற்ற 11 டெஸ்டில், 248 ரன் தான் எடுத்துள்ளார். 36 ஆல் அவுட் என்று கோலி கேப்டன்சியில் வீழ்ந்த இந்திய அணியை ரகானே தூக்கி நிறுத்தினார்.

    தற்போது மீண்டும் கேப்டனாக களமிறங்கும் இவர், பேட்டிங்கில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால் மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நேற்று தனது பயிற்சியை துவக்கினார். பல ஆண்டுக்குப் பின் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள ஜெயந்த் யாதவ், மும்பை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே இணைந்து, ரகானேவுக்கு பந்து வீசினர். பெரும்பாலும் பந்தை தடுத்து விளையாடுவதில் அதிக கவனம் செலுத்தினார்.

    முதல் டெஸ்டில் துணைக் கேப்டனாக களமிறங்கவுள்ள புஜாராவும், மற்றொரு ஆடுகளத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். தவிர சுப்மன் கில், மயங்க் அகர்வால் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக பேட்டிங் பயிற்சியில் செய்தனர். இஷாந்த் சர்மா, பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர்.

    நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. ஜெய்ப்பூரில் பனிப்பொழிவு இருக்குமா என்பது கவலைக்குரிய விஷயம், ஏனெனில் துபாயில் டாஸ் வென்ற அணிகளே பெரும்பாலும் வெற்றிபெற்ற நிலையில் இங்கும் அதே போன்ற சூழ்நிலை இருக்குமானால் அது போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய டெஸ்ட் அணி வருமாறு: ரகானே (Captain),ராகுல், மயங்க் அகர்வால், , புஜாரா (vice-captain), ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர், விருத்திமான் சகா, (wicket-keeper), கே.எஸ். பரத், (wicket-keeper), ஜடேஜா, ஆர்.அஸ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், , சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: