• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டெஸ்ட், ஒருநாள், டி20- தனித் தனி அணி என்று திட்டமிடவில்லை- ராகுல் திராவிட் திட்டவட்டம்

டெஸ்ட், ஒருநாள், டி20- தனித் தனி அணி என்று திட்டமிடவில்லை- ராகுல் திராவிட் திட்டவட்டம்

ரோகித் சர்மா- ராகுல் திராவிட்

ரோகித் சர்மா- ராகுல் திராவிட்

கிரிக்கெட் விளையாட்டில் பணிச்சுமை மேலான்மை மிக முக்கியமானது. நமது வீரர்கள் உடல்தகுதியுடன் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவாறு திட்டமிடல் வேண்டும்.

  • Share this:
    டெஸ்ட். ஒரு நாள், டி20 என ஒவ்வொரு ஃபார்மெட்டுக்கும் ஒவ்வொரு அணியை தயார் செய்வது எனது திட்டமில்லை என்று இந்திய அணியின் புதியத் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

    இந்திய அணி நியூசிலாந்தை டி20 போட்டியில் சந்திப்பதை முன்னிட்டு அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக பேசிய போது, “இது கடினமான காலம். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் சரியான ஓய்வு இருப்பது அவசியம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வீரர்களை மதிக்க வேண்டும். வீரர்கள், அவர்களுக்கு தேவையான ஓய்வை எடுத்து கொள்கிறார்களா என்பதை நான் உறுதி செய்ய வேண்டும். டெஸ்ட். ஒரு நாள், டி20 என ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு அணியை தயார் செய்வது எனது திட்டமில்லை. அனைத்து வடிவ கிரிக்கெட்டும் முக்கியமானதுதான்.

    அடுத்து ஐசிசி தொடர் வர இருக்கும் நிலையில், அதற்காக தயார் செய்து கொள்வது அவசியமாகிறது. அணியை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் தேவை. கிரிக்கெட் விளையாட்டில் பணிச்சுமை மேலான்மை மிக முக்கியமானது. நமது வீரர்கள் உடல்தகுதியுடன் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவாறு திட்டமிடல் வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, “இந்திய அணி வீரர்கள் பயமின்றி ஆடலாம். ஒரு அணியில் ஆல்-ரவுண்டரின் பங்கு மிக முக்கியமானது. தேவைக்கு ஏற்ப, ஒவ்வொரு வீரரும் அவர்களது பொறுப்புகளை மாற்றி கொள்ள வேண்டும். விராட் கோலி மிக முக்கியமான வீரர். அவர் அணிக்கு திரும்பு நேரம், இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேரும்” என்று அவர் தெரிவித்தார்.

    இன்றைய டி20 போட்டியின் உத்தேச இந்திய அணி: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், அக்சர் படேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், செகல், சிராஜ்.

    நியூசிலாந்து அணி: கப்டில், மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மென், டிம் செய்ஃபர்ட் (வி.கீ), ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர், கைல் ஜேமிசன், டிம் சவுதீ, ஆடம் மில்ன, இஷ் சோதி.

    ஜெய்பூரில் சர்வதேச டி20 போட்டி இப்போதுதான் நடைபெறுகிறது, பனிப்பொழிவு நிச்சயம் இருக்கும் இதனால் டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்யும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: