ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அந்த சிங்கிளுக்கு புஜாரா ஓடிவந்திருந்தால் ஷுப்மன் கில் ஆட்டமிழந்திருக்க மாட்டார்

அந்த சிங்கிளுக்கு புஜாரா ஓடிவந்திருந்தால் ஷுப்மன் கில் ஆட்டமிழந்திருக்க மாட்டார்

கான்பூர் டெஸ்ட்- நியூசிலாந்து

கான்பூர் டெஸ்ட்- நியூசிலாந்து

கான்பூர் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்குப் பிறகு கைல் ஜேமிசன் பந்தில் ஷுப்மன் கில் பவுல்டு ஆகி வெளியேறினார். 5 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் 52 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ஒரு சிங்கிளுக்கு புஜாரா ஓடி வராததால் அதே ஓவரில் ஷுப்மன் கில் ஆட்டமிழக்க நேரிட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கான்பூர் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்குப் பிறகு கைல் ஜேமிசன் பந்தில் ஷுப்மன் கில் பவுல்டு ஆகி வெளியேறினார். 5 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் 52 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ஒரு சிங்கிளுக்கு புஜாரா ஓடி வராததால் அதே ஓவரில் ஷுப்மன் கில் ஆட்டமிழக்க நேரிட்டது.

சற்று முன் இந்திய அணி புஜாரா விக்கெட்டையும் இழந்து தன் முதல் இன்னிங்ஸில் இந்தியா 106 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. ரஹானே பிரமாதமான கவர் ட்ரைவில் அடித்த பவுண்டரியுடன் ஸ்கோரை 100க்கு கொண்டு சென்றதோடு 10 ரன்களுடன் கிரீசில் இருக்கிறார், அறிமுக வீரர் ஷ்ரேயஸ் அய்யர் இறங்கியுள்ளார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு கைல் ஜேமிசன் முதல் ஓவரை வீசினார். ஆஃப் கட்டர் அல்லது இன்ஸ்விங்கர்களை அவர் வீசத்தொடங்கினார். அப்படிப்பட்ட பந்து ஒன்றில்தான் காலை நன்றாக முன்னால் நீட்டி ஆடாமல் அரைகுறையாக நீட்டி ஆடியதில் இன்ஸ்விங்கர் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பைச் சாய்த்தது கில் பவுல்டு ஆனார். கைல் ஜேமிசன் 2வ்து விக்கெட்டை கைப்பற்றினார்.

ஆனால் இதற்கு முன்னால் ஜேமிசன் பந்தை பேக்வர்ட் பாயிண்ட் திசையில் கொஞ்சம் இடைவெளியில் தட்டி விட்டு சிங்கிளுக்கு அழைத்தார் ஷுப்மன் கில், ஆனால் அது டைட் சிங்கிள்தான், புஜாரா, ஓட மறுத்து கில்லை திருப்பி அனுப்பினார். பீல்டர் அடித்த த்ரோவும் சரியாக இல்லை. ஒருவேளை அந்த சிங்கிளை ஓடியிருந்தால் ஷுப்மன் கில் அந்த ஓவரில் ஆட்டமிழந்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் புஜாரா ஸ்ட்ரைக்கிற்கு வந்திருப்பார்.

கிரிக்கெட்டி. இப்படி நடப்பது உண்டு, ஆனால் இதை யாரும் கவனிக்க மாட்டார்கள் வீரர்களுக்குத் தெரியும். சச்சின் டெண்டுல்கர் சிங்கிளுக்கு அழைத்து எதிர் முனை வீரர் ஓடி வராமல் இருந்து ஆட்டமிழந்த தருணங்களில் சச்சின் கடும் கோபமடைந்ததை நாம் பார்த்திருக்கிறோம். ரிஸ்க் எடுத்தாலும் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய வேண்டும். அதுதான் கிரிக்கெட்டின் பார்ட்னர்ஷிப்பின் தாத்பர்யம்.

சரி புஜாராவாவது நின்று ஆடினாரா இல்லை. மீண்டும் ஒருமுறை அவர் சவுதீ வீசிய ஃபுல் லெந்த் பந்து சற்றே வெளியே எடுக்க எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் பிளண்டெலிடம் கேட்ச் ஆகி 26 ரன்களுடன் வெளியேறினார்.

ஒரு புறம் கைலி ஜேமிசன் இன்ஸ்விங்கர்களாக வீசி பேட்ஸ்மென் காலை முன்னால் நகரவைத்து பழக்கப்படுத்த சவுதி அதனை தன் அவுட்ஸ்விங்கருக்கு சரியாகப் பயன்படுத்தி புஜாராவின் எட்ஜைப் பிடித்தார்.

முறையான பேட்டர்களில் ரகானே, ஷ்ரேயஸ் அய்யர்தான் கடைசி. இனி வருவோர் எல்லாம் ஜடேஜா, சகா, அஸ்வின், அக்சர் படேல் போன்ற டெய்ல் எண்டர்கள் மட்டுமே. இப்போதைக்கு இந்தியா சற்றே பின்னடைவு கண்டுள்ளதாகவே தெரிகிறது. பிக் ஆஃப் த பவுலர் என்றால் கைல் ஜேமிசன் இவர் 10 ஓவர் 4 மெய்டன் 24 ரன்கள் 2 விக்கெட்.

First published:

Tags: Ind vs NZ