• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அஸ்வின் மோசமாக வீசி நான் பார்த்ததில்லை- விராட் கோலிக்கு கப்டில் சூசக ‘மெசேஜ்’

அஸ்வின் மோசமாக வீசி நான் பார்த்ததில்லை- விராட் கோலிக்கு கப்டில் சூசக ‘மெசேஜ்’

அஸ்வின்

அஸ்வின்

  • Share this:
    விராட் கோலியினால் இங்கிலாந்து தொடர் முழுதும் உட்கார வைத்து அழகு பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ரோகித் சர்மா கேப்டன்சியில் எழுச்சி பெற்று அன்று 2 விக்கெட்டுகளை வெறும் 23 ரன்களுக்கு நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் எடுத்து அசத்தினார். இந்நிலையில் நியூசிலாந்து தொடக்க வீரர், அதிரடி சூரர் மார்டின் கப்டில் அஸ்வின் பந்து வீச்சை அடிப்பது ஏன் கடினம் என்று மனம் திறந்துள்ளார்.

    2017-க்குப் பிறகே அஸ்வினை ஒருநாள், டி20 ஆகிய போட்டிகளிலிருந்து விராட் கோலி ஒதுக்கினார், பிறகு டெஸ்ட் போட்டியிலும் கூட அஸ்வினை அவ்வப்போது ஒதுக்கி மனமுவந்தார் விராட் கோலி. ரவிசாஸ்திரிக்கு கோலியிடம் பேச முடியவில்லை ஏனோ பேசாமலே இருந்து விட்டார். டி20 உலகக்கோப்பை தொடரில் கூட வார்ம் அப் போட்டியில் ரோகித் சர்மா கேப்டன்சியில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வினுக்கு தொடக்க ஓவரையே கொடுக்க வார்னர், மிட்செல் மார்ஷ் இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தினார்.

    ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராகவும் நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்தியா தோற்று உலகக்கோப்பை கனவையே தகர்த்த தோல்வி அணியில் அஸ்வினை சேர்க்கவில்லை விராட் கோலி. ஏன் இத்தனை வன்மம் என்று யாரும் அவரை கேள்வியும் கேட்கவில்லை. ஐபிஎல் பவுலரான வருண் சக்ரவர்த்தியை எடுத்து கையை சுட்டுக்கொண்டார் கோலி.

    அதன் பிறகு, எல்லா வாய்ப்புகளும் பறிபோன பிறகு அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கிறார் கோலி, எல்லாம் முடிந்த பிறகு பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது போல் அஸ்வினை பெஞ்ச் வீர்ராக நடத்தினார் விராட் கோலி, 3 வடிவங்களிலும் 600க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்த ஒருவரை, நாள் தோறும் தன் பந்து வீச்சை பயிற்சி மூலம் மெருகேற்றி புதிது புதிதாக பந்து வீச்சுகளை பரிசோதிக்கும் கடினமான முயற்சியாளர் அஸ்வினை விராட் கோலி உண்மையின் அவமானப்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.

    இந்நிலையில் அன்று பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக தன்னை எடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அன்று முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா கேப்டன்சியில் காட்டினார் அஸ்வின், மார்டின் கப்டில் கடைசி வரை நின்று 70 ரன்கள் விளாசினார். அவர் அஸ்வின் பந்து வீச்சை வர்ணிக்கும் போது, “அஸ்வின் தன் லைன் மற்றும் லெந்த்தின் மீது கட்டுப்பாடு மிக்கவர். மோசமான பந்துகளை அவர் வீசுவதில்லை.

    அவரது கிரிக்கெட் வாழ்வில் எனக்கு மோசமான பந்துகளை அவர் வீசியதாக எனக்கு நினைவில் இல்லை. அவர் பந்துகளை அடிக்க முடியவில்லை. அவர் பந்தின் வேகத்தைக் கூட்டுவதும் குறைப்பதும் மிகவும் நுட்பமானவை, கட்டுக்கோப்பு மிக்கவை. அவர் பந்துகளை அடித்து ஆடுவது கடினம்.” என்று விராட் கோலிக்கு சூசக மெசேஜ் போல் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: