முகப்பு /செய்தி /விளையாட்டு / தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்திய அணி அபார வெற்றி

தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்திய அணி அபார வெற்றி

ஹர்ஷல் படேல்

ஹர்ஷல் படேல்

நார்த்தாம்ப்டன் ஷயருக்கு எதிரான டி20 டூர் மேட்சில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றது, ஹர்ஷல் படேலில் அதிரடி அரைசதம் மற்றும் அபார பவுலிங் என்ற ஆல்ரவுண்ட் திறமையினால் இந்தியா 10 ரன்களில் அபார வெற்றி பெற்றது. அன்று டெர்பிஷயருக்கு எதிராகவும் தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

நார்த்தாம்ப்டன் ஷயருக்கு எதிரான டி20 டூர் மேட்சில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றது, ஹர்ஷல் படேலில் அதிரடி அரைசதம் மற்றும் அபார பவுலிங் என்ற ஆல்ரவுண்ட் திறமையினால் இந்தியா 10 ரன்களில் அபார வெற்றி பெற்றது. அன்று டெர்பிஷயருக்கு எதிராகவும் தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற நார்த்தாம்டன் கேப்டன் ஜோஷ் காப் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார், சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இஷான் கிஷன் 16 ரன்களில் வெளியேற ராகுல் திரிபாதி 7 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றமளித்தார். சூரியகுமார் யாதவ் நெதர்லாந்தின் பிரமாத பவுலர் கிளோவர் எட்ஜ் செய்யவைத்தார், இரண்டு பந்து பீட்டன் பிறகு அவுட், சூரியகுமார் யாதவ் இன்னொரு டக் அடித்தார்.

8/3 என்று தடுமாறிய நிலையில் கேப்டன் தினேஷ் கார்த்திக் 5ம் நிலையில் அதாவது 3வது டவுனில் இறங்கினார். தன் வழக்காமான எதிர்த்தாக்குதலில் 3 பவுண்ட்ரிகள் 1 சிக்சருடன் 26 பந்தில் 34 ரன்கள் விளாசினார். லெக்ஸ்பின்னர் அலெக்ஸ் ரஸலை தூக்கி அடித்து ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்ஸ் விளாசினார். பிறகு அதே ஷாட்டை முயற்சி செய்தார் கார்த்திக் பந்தும் சிக்ஸர் நோக்கிச் சென்றது ஆனால் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனது.

கார்த்திக் அவுட் ஆன போது இந்தியா 72/5. இன்னும் 9 ஓவர்கள் மீதமுள்ளது. பிறகு ஹர்ஷல் படேலும், வெங்கடேஷ் அய்யரும் சேர்ந்து 60 ரன்கள் சேர்த்தனர். ஹர்ஷல் படேல் 34 பந்துகளில் அரைசதம் எடுத்து 36 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 54 ரன்கள் விளாசினார். அய்யர் 20 ரன்கள் எடுத்தார். இந்தியா 149/8 என்று முடிந்தது.

தொடர்ந்து ஆடிய நார்த்தாம்ப்டன் ஷயர் மோசமாகத் தொடங்கியது ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கானிடம் விக்கெட்டுகளை இழந்து 7 ஓவர்களில் 54/5 என்று ஆனது. நார்த்தாம்டன் அணியில் சயிப் ஜயிப் 33 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். கடைசியில் நேதன் பக் 18 ரன்களையும் பிராண்டன் க்ளோவர் 15 ரன்களையும் எடுத்தார். 19.3 ஓவர்களில் 139 ரன்களை எடுத்தனர். இந்தியா 10 ரன்களில் வெற்றி பெற்றது.

top videos

    பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், செஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    First published:

    Tags: T20