Home /News /sports /

கோலி அடித்த பந்தை அந்தரத்தில் பாய்ந்து கேட்ச் பிடித்த நியூசிலாந்து வீரர்..! - வைரல் வீடியோ

கோலி அடித்த பந்தை அந்தரத்தில் பாய்ந்து கேட்ச் பிடித்த நியூசிலாந்து வீரர்..! - வைரல் வீடியோ

INDvsNZ

INDvsNZ

India vs Newzealand | கேப்டன் விராட் கோலி பென்னட் பந்து வீச்சில் சான்டன்னரிடம் கேட்ச் கொடுத்து 11 ரன்னில் அவுட்டானார்.

    நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் விராட் கோலி அடித்த பந்தை சான்டன்னர் அந்தரத்தில் பாய்ந்து அருமையான கேட்ச் பிடித்து அவுட்டாகினார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் மனிஷ் பாண்டே அதிகபட்சமாக 50 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.

    இதற்கு முன் கேப்டன் விராட் கோலி பென்னட் பந்து வீச்சில் சான்டன்னரிடம் கேட்ச் கொடுத்து 11 ரன்னில் அவுட்டானார். விராட் கோலி அடித்த பந்தை சான்டன்னர் அந்தரத்தில் பறந்தப்படி கேட்ச் பிடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



    இந்த போட்டியில் நியூசிலாந்து அணியும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்ததால் இந்த போட்டியிலும் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் முதலில் விளையாடிய நியூசிலாந்து 13 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று 4-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ind vs NZ

    அடுத்த செய்தி