Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IND vs NZ ODI : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை எதில் பார்க்கலாம்?

IND vs NZ ODI : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை எதில் பார்க்கலாம்?

ரோஹித் சர்மா - டாம் லாதம்

ரோஹித் சர்மா - டாம் லாதம்

முக்கிய வீரர்களின் விலகல் காரணமாக இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை அட்டகாசமாக கைப்பற்றிய நிலையில், இந்திய அணி அடுத்த அசைன்மென்டுக்கு தயாராகியுள்ளது. 3 போட்டிகளைக் கொண்டதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விளையாடப்படவுள்ளது. முதல் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி தரப்பில் முன்னணி பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக பங்கேற்க மாட்டார். இதேபோன்று ரவிந்திரா ஜடேஜாவுக்கு உடல் தகுதி பிரச்னை காரணமாக விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மற்றொரு முக்கிய ஆட்டக்காரரான பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் விளையாட மாட்டார்.  இதேபோன்று தனிப்பட்ட காரணங்களுக்காக கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இடம்பெறவில்லை.

முக்கிய வீரர்களின் விலகல் காரணமாக இளம் வீரர்களுக்கு  அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச தொடரில் கலக்கிய இஷான் கிஷன் அணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கும், சூர்ய குமாருக்கும் முழு வாய்ப்பு வழங்கப்படலாம். இலங்கை தொடரைப் போலவே நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டி மதியம் 1.30 மணியளவில் தொடங்குகிறது. இதற்கு முன்பாக 1 மணிக்கு டாஸ் போடப்படும்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுவதையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட் வொர்க் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆன்லைனில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்து மகிழலாம்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் –

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரஜத் பட்டிதார், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகம்மது சிராஜ், உம்ரான் மாலிக்.

First published:

Tags: Cricket